பஹ்ரைனில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைனில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

ஜூன் 11,2018  IST

Comments

பஹ்ரைன் செந்தமிழர் பாசறை சார்பாக ஜூன் 8ம் தேதி வெள்ளிக்கிழமை அதிலியா பகுதில் அமைந்துள்ள சென்ஞ்சுரி உணவக உள்ளரங்கில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. பாசறையின் ஒருங்கிணைப்பாளர் வில்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை திட்டக்குழு பொறுப்பாளர் இப்ராஹீம் மற்றும் நிதித்துறை பொறுப்பாளர் சிக்கந்தர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க தலைவர் பெ.கார்த்திகேயன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர் வல்லம் ரியாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர் இரவிச்சந்திரன், எஸ்டிபிஐ கட்சியின் பொறுப்பாளர் அதாவுல்லா மற்றும் ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பாசறையின் செய்தி மற்றும் வேலை வாய்ப்புத்துறை பொறுப்பாளர் முகமது அபுசாலி தொகுத்து வழங்க, பிற துறை பொறுப்பாளர்கள் இரமேஷ், யோகானந்தம், பழனிக்குமார், ஷ்யாம் சுந்தர், மதன், மதிவாணன், தினேஷ், அசோக், தேவன் மற்றும் உறுபினர்கள் கலந்துகொண்டனர்.

மத வேறுபாடில்லாமல் பஹ்ரைன் வாழ் தமிழர்கள் பெருவாரியாக கலந்துகொண்ட விழாவில் பாசறையின் இணை ஒருங்கிணைப்பாளர் குகன் நன்றி தெரிவித்தார்.

- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)