சிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி

ஜூன் 14,2018  IST

Comments

சிங்கப்பூர் : ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர்க் கிளை தனது 78 ஆவது சிறப்பு நிகழ்ச்சியாக ஜீன் பத்தாம் தேதி பென்கூலன் பள்ளிவாசல் பன்னோக்கு மண்டபத்தில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது. சிங்கப்பூர் அரசு பிரதமர் துறை இரண்டாம் நிதி – கல்வி – சட்ட அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சங்கத்தின் சேவைகளை வெகுவாகப் பாராட்டியதுடன் இது போன்ற நிகழ்வுகள் பல இன மக்கள் ஒன்றுகூடி சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த உதவும் என்றும் கூறி வாழ்த்தினார். நிகழ்வில் பத்து குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை சங்கத்தின் சார்பாக அமைச்சர் வழங்கிப் பெருமைப்படுத்தினார்.சங்கத்தின் தலைவர் பட்டயக் கணக்காய்வாளர் கவிஞர் மு.காதர் வரவேற்புரை ஆற்றினார். பல்வேறு அமைப்புக்களின் தலைவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)