குழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி

ஜூன் 18,2018  IST

Comments

  பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் பஹ்ரைன் KIMS மருத்துவமனை இணைந்து உலக சுற்றுச்சூழல் தினம் 2018 முன்னிட்டு குழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி நடத்தியது. “சுற்றுச்சூழல் பேணுதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 50 குழந்தைகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
THE NEW INDIAN SCHOOL-ன் கலை மற்றும் கைவினைத்துறை ஆசிரியர்  சபீனா மற்றும் பஹ்ரைன் கேரளிய சமாஜத்தின் செயலாளர் ஹரிஷ் மேனன் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்தனர். THE INDIAN CLUB -ன் செயலாளர் நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினர். மற்றும் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

பத்து வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் பரிசை பிரணவ் ஆகாஷ், இரண்டாம் பரிசை கோபிகா பாரதிராஜன், மூன்றாம் பரிசை நகுஜா இராமானுஜம், நான்காம் பரிசை சோபினி சுப்பிரமணியன் பெற்றனர். பத்து முதல் பதினைந்து வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் பரிசை சியாத் அலி பீர் முகமது, இரண்டாம் பரிசை ஜெயஸ்ரீ இராஜ்குமார் மற்றும் மூன்றாம் பரிசை ஜெயஸ்ரீ ஜெயகுமார் பெற்றனர்.
நிகழ்ச்சி பொறுப்பாளரும் சங்க உறுப்பினர் நலத்துறை செயலாருமான பஞ்சு இராஜ்குமார் தொகுப்புரை வழங்க, சங்க தலைவர் பெ. கார்த்திகேயன் மற்றும் KIMS மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் சஞ்சீவ் வாழ்த்துரை வழங்கினர். KIMS மருத்துவமனையின் தலைமை நிர்வாகி அனஸ் பஷீர் மற்றும் வளர்ச்சி அலுவலர் இராஜசேகர் முன்னிலை வகித்தனர். சங்க பொது செயலாளர் செந்தில் குமார் நன்றியுரை வழங்கினார். சங்க செயற்குழு உறுப்பினர்கள் மதன் செல்லம், சரவணன்,  பிரவீன், கார்த்திக், பிரதீப், மங்கையர் குழு அமைப்பாளர்  அணித்தா கார்த்திகேயன்  மற்றும் தன்னார்வு தொண்டர்கள் காசி இராஜன், வைத்தீஸ்வரன்,  பிரபாகரன், பிரேமா இராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்





Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வணிகவளாகத்தில் தீ விபத்து

சென்னை:சென்னை அடையாறு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் மின்கசிவு காரணமாக தீ பிடித்தது. தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ...

ஜூலை 18,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)