சிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்

ஜூன் 18,2018  IST

Comments

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய கும்பாபிஷேக, மண்டலாபிஷேக நிறைவாக 1080 கலசங்கள் கொண்ட ஸ்ரீ சகஸ்ர கலசாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ஆர்வத்துடன் சமர்ப்பித்த அபிஷேகப் பொருட்கள் எம்பெருமானின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்டு யாகசாலையில் சகஸ்ர கலச ஹோமம் நடைபெற்றது.

பிரதான கலசம் தலைமை அர்ச்சகரால் சிரமேற் கொண்டு ஆலயம் வலம் போது பக்தர்கள் “ கோவிந்தா ...நாராயணா “ என சரண கோஷமிட்டது மெய்சிலிர்க்க வைத்தது. ஸ்ரீ பெருமாளுக்குத் திருப்பாவாடை சாத்தியது கண்கொள்ளாக் காட்சியாகும். பிரதான கலசத்தைக் கொண்டு மூலவருக்கும் மற்ற பரிவார சந்நிதிகளிலுள்ள ஸ்ரீ விநாயகப் பெருமான், மகா லட்சுமித் தாயார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஆண்டாள், சுதர்சநர் முதலானவர்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வைகுண்டநாதனின் திருவருள் பெற்றுச் சென்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)