இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

ஜூன் 23,2018  IST

Comments

இலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை அருள்பாலிக்கின்றாள். இத்திருத்தலம் செல்வதற்குரிய பேரூந்து எண்கள் 210,264,280,355. குடியிருப்பு பகுதிகள் மிகுந்த இடத்தில் திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலம் 03.11.2017 அன்று கும்பாபிசேகத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தினமும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு அருள்மிகு தெய்வங்கள் நவகிரகம், கணபதி;, சிவலிங்கம்,வேல் முருகனுக்கு உரிய வேலுடன் கூடிய சன்னதி, வைரவர், ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஜா தட்சிணாமூர்த்தி, விஷ்ணு,ஆஞ்சநேயர் இராமர் சீதாலட்சுமி ஆகியோர்களுக்கு திரு உருவ சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

திருத்தலத்தில் குமாரஸ்தவம் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பாடலை காணலாம். தமிழக கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வண்ணம் இத்தலத்தில் ஆண்டு தோறும் சிறப்பு விழாக்களை எடுத்து நடத்துவதில் இலண்டன் வாழ் இந்திய மக்களும்.குறிப்பாக தமிழ் மக்களும், இலங்கை மக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.

இதில் ஒரு சிறப்பு அம்சமாக குறிப்பிட வேண்டுமானால் இந்த ஆண்டு இத்திருத்தலத்தில் நடைபெற்ற தேர்திருவிழாவினையே குறிப்பிடலாம். தேர் திருவிழாவில் பெரும் திரளான அடியவர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்துள்ளனர். அம்பாளின் திருவீதி வலம்வரும் காட்சியினை பக்த கோடிகள் கண்டு களித்துள்ளனர். இத்தலத்தில் குடும்ப விழாக்கள் நடத்துவதற்கும், கோவிலின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் அரங்கம் வசதிகள் உள்ளன. இங்கு நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் காலை 10.00 மணி முதல் 13.00 மணி வரை. மாலை 18.00 முதல் 21.00 மணி வரை. மேலும் திருத்தலம் பற்றிய செய்திகள் அறிந்து கொள்ள அணுக வேண்டிய கையகப்பேசி எண் 07492 454500 மற்றும் 07984 955654


- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் சார்பில் தீபாவளி

ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் சார்பில் தீபாவளி...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

ஷார்ஜாவில் என்னைத் தேடி நூல் அறிமுக நிகழ்ச்சி

ஷார்ஜாவில் என்னைத் தேடி நூல் அறிமுக நிகழ்ச்சி...

துபாய் ஈமான் அமைப்புக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அரசு அதிகாரிகள்

துபாய் ஈமான் அமைப்புக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அரசு அதிகாரிகள்...

Advertisement
Advertisement

புயல் பாதிப்பு: முதல்வர் ஆலோசனை

சென்னை : கஜா புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தின் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ...

நவம்பர் 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us