சிங்கப்பூரில் நூல்கள் அறிமுக விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் நூல்கள் அறிமுக விழா

ஜூன் 26,2018  IST

Comments

தமிழக இதயக்கனி இதழாசிரியர் எஸ்..விஜயன் எழுதிய ‘ எம்.ஜி.ஆர்.பயணம் “ – மற்றும் “ அம்மா என்றால் அன்பு “ ஆகிய நூல்களும் இலங்கை சதீஷ் சிவலிங்கம் எழுதிய “ இலங்கையில் சமூகங்களும் இந்தியத் தொடர்பும் “ நூல்கள் அறிமுக விழா உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. தண்மதி புகழேந்தி, கோபிநாத் தீத்யா ஆகியோரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது.

ஏய்ட் பாயிண்ட. எண்டர்டெய்ண்மென்ட் நிறுவனம் கவிமாலை ஆதரவுடன் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதன் அதிபர் அருமைச்சந்திரன் காணொளி மூலம் அவரது நிறுவனம் சிங்கப்பூரில் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கும் பல மொழிப் படங்களை அதிகச் செலவின்றி இல்லத்திலிருந்தே குடும்பத்துடன் தியேட்டர்களில் திரையிடப்படும் அன்றே கண்டு மகிழும் புதிய நவீன வசதி பற்றி விளக்கினார்.

இதழியலாளர் விஜயன் தமது உரையில் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஆகியோரின் சிறப்பியல்புகள் பற்றி எடுத்துரைத்தார். இலங்கையைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் பேசுகையில் இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர் படும் துன்ப துயரங்களை உருக்கத்தோடு எடுத்துரைத்தார். தமிழக குணசித்திர நடிகர் தம்பி ராமையா பாடியும் இசையமைத்தும் நகைச்சுவை ததும்ப சிறப்புரையாற்றிப் பார்வையாளர்களை மகிழ்வித்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் ரா.தினகரன் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ வகுத்த தொலை நோக்குத் திட்டத்தால் உலகிலேயே முதன்மை பெற்ற நாடாகத் திகழும் சிங்கப்பூரை முன்னுதாரணமாக மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று கூறியதோடு சிங்கப்பூரர்களும் கவனமாகக் கையாள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

சிறப்பு விருந்தினர் நூல்களை வெளியிட முதற் பிரதிகளை ஜோஸ்கோ பயண ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நாகை தங்க ராசு, தமிழறிஞர் சுப.திண்ணப்பன், எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், மூத்த பத்திரிகையாளர்கள் ஏ.பி.ராமன், வெ.புருஷோத்தமன் பெற்றுக் கொண்டனர்.கவிஞர் ராஜீ ரமேஷ் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)