மிச்சிகனில் பரதநாட்டிய அரங்கேற்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மிச்சிகனில் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஜூன் 28,2018  IST

Comments

மிச்சிகன் : அமெரிக்காவின் மிச்சிகனில் ஜூன் 24 அன்று,லேம்பியர் உயர் நிலைப்பள்ளியின் அரங்கத்தில் குமாரி சஞ்சனா அனில் தனது பரதநாட்டியக் கலையை அரங்கேற்றினார். 2007ஆம் ஆண்டு முதல் "நாட்டிய வித்யாலயா " என்ற நடனப் பள்ளியில் பயின்று வரும் சஞ்சனா,இன்டர்நேஷனல் அகாடமியில் தனது 12ஆம் வகுப்பினை முடித்து ,மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் தனது கல்லூரிப் பயணத்தைக் தொடங்க இருக்கிறார்.

இந்நிகைழ்ச்சியில் அனைத்துப் பாடல்களும் தமிழ் மொழியில் இயற்றப்பட்டவையாக அமைந்தது. ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் கணேஷ கௌத்துவத்தில் தொடங்கி , முத்துஸ்வாமி கவி,சுப்பராம ஐயர் ,பாபநாசம் சிவன் ஆகிய இசை மேதைகள் இயற்றிய பாடல்களுக்கு முறையே வர்ணம் மற்றும் பதம் பிடித்தார் சஞ்சனா. ஒவ்வொரு பாடலுக்கும் இவரது முக பாவங்களும் ,லயமும் ,பதமும் அனைவரின் பாராட்டையும் பெற்றன.

"நாட்டிய வித்யாலயா " நடனப் பள்ளியின் குரு ராதிகா கணேசன் மிச்சிகன் வாழ் மக்களிடையே 2007ஆம் ஆண்டு முதல் பரதக் கலையை பயில்வித்து பரப்பி வருகின்றார். இவர் சித்ரா விஸ்வேஸ்வரனின் மூத்த சிஷ்யை என்பது குறிப்பிடத்தக்கது.

மிச்சிகனின் மூத்த வாய்ப்பாட்டுக் கலைஞரான ஸாந்தபிரகாஷ் , மிகவும் அருமையாகப் பாடியதோடு மட்டுமில்லாது தமக்கே உரிய பாணியில் இளம் கலைஞரை ஊக்குவித்த வண்ணம் நடத்திச் சென்றார். இவருக்கு பக்க பலமாக மிருதங்கத்தில் மற்றொரு மூத்த கலைஞரான ஜெயசிங்கம் மிருதங்கம் வாசித்தது மட்டுமல்லாது ஜதிஸ்வரமும் சொல்லி கலைக்கு மெருகூட்டினார்.வயலின் இசைத்தவர் தேஜஸ் ரெங்கஸ்வாமி . இவர் 10ஆம் வகுப்பு பயின்று வரும் ,வளர்ந்து வரும் இளம் கலைஞர் . குழல் ஊதிய சுரேஷ் மிச்சிக்கனுக்கு மற்றுமொரு சிறப்பு ஆவார்.

இந்நிகழ்வின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சம் இதன் ஒலி -ஒளி அமைப்பாகும். மிச்சிகனின் பிரபல ஒலி -ஒளி அமைப்பாளர் சதீஷ் சுப்ரமணியன் நடனக் கலைஞரின் நுட்பமான பாவங்களை வெளிக் கொணரும் வண்ணம் தம் விரல்களுக்கு வேலை கொடுத்தார் . இவர் பரிதிமார் கலைஞர் சூர்ய நாராயண சாஸ்திரியின் கொள்ளுப் பேரன் ஆவார் . சதீஷ் தாமே ஓர் சிறந்த நாடாக கலைஞரும் கூட .
- தினமலர் வாசகர் காந்தி சுந்தர்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

அமைப்பாளர் தாக்கியதில் சமையலர் காயம்

நாமக்கல்:ராசிபுரம் நகராட்சி அங்கன்வாடி மைய அமைப்பாளர் உமா. இவருக்கும் அதே மையத்தில் சமையலராக இருக்கும் கர்ப்பிணி தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் உமா ...

ஜூலை 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)