ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஜூன் 28,2018  IST

Comments

ஆலய குறிப்பு : திருமூலரால் “சிவ பூமி” என்று சிறப்பிக்கப்பட்ட ஈழ திருநாட்டில் ஜூன் 24 ம் தேதி திருவாசகத்துக்கென கட்டியெழுப்பப்பட்டுள்ள அரண்மனை கோயில் திறக்கப்பட்டுள்ளது. யாழ். மண் திருவாசகத்தை உயிர்ப்புடன் பேணும் மண் என்றால் மிகைப்படாது. மார்கழியில் திருமுறைக் காப்பிட்டு திருவாகசப் பாக்களை ஓதும் வழக்கமாயினும் சரி, நீத்தார் சடங்குகளில் திருப்பொற்சுண்ணத்தைப் படிக்கும் மரபாயினும் சரி ஆலயங்களில் மற்றும் மடங்களில் திருவாசக முற்றோதலை மேற்கொள்வதானாலும் சரி திருவாசகத்திற்கு முதன்மை வழங்கும் நடைமுறை இன்றும் தொடர்ச்சியுற்றுள்ளது. இந்நிலையில் ஆறு.திருமுருகன் அமைத்த திருவாசக அரண்மனை 24.06.2018 திறப்பு விழாவும், ஜூன் 25 ல் திருக்குடமுழுக்கு விழாவும் இடம்பெற்றது.



ஆலய அமைப்பு : ஆஸ்திரேலியா சிட்னியில் வாழும் இதய வைத்திய நிபுணர் மனமோகன், சிவகௌரி தம்பதியரின் உபயமாகக் கிடைத்த நிலத்தில் அவர்களின் உபயமாக அமைக்கப்பட்ட கோவில் உயர்ந்து நிற்கிறது. கோவிலில் மூலவராகத் தட்சணாமூர்த்தி, அவர் முன்னால் நந்தியெம் பெருமான் அதற்கும் முன்னால் கற்றேர் அதில் சிவலிங்கத்துடன் மணிவாசகர் என அரண்மனை அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கிழக்கு மற்றும் மேற்குப் புறங்களில் அறுநூற்று ஐம்பத்தாறு திருவாசகப் பாடல்களும் கருங்கல்லில் மனிதவலுவினால் உளிகொண்டு செதுக்கப்பட்டுள்ளன.

ஆறு.திருமுருகன் சொற்பொழிவு ஒன்றிற்காக மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருவண்ணாமலை சென்றபோதே இக்கரு உதயமானது. திருமந்திரமும் திருவாகசமும் என்ற பொருளில் அவர் உரையாற்றியபோது அங்கிருந்த ஒரு சித்தர் திருமுருகனாரை ஆசீர்வதித்து “திருவாசகத்தை யாழ்ப்பாணத்தில் நீ காப்பாற்றுவாய். காற்று மழை நெருப்பு என எவையும் தீண்டாத வண்ணம் அதைப் பாதுகாக்கக் கூடிய பணியை மேற்கொள்ளக்கடவாய்” என்றாராம். டிஜிட்டல் யுகத்தில் திருவாகசத்தைக் காப்பாற்ற இணையம் உள்ளதுதானே எனப்பலரும் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் எக்காலத்திலும் அழியாத ஒரு வடிவில் திருவாசகத்தைப் பேணும் முயற்சியாக திருவாசக அரண்மனை அமைக்கும் ஆணை மறைபொருளாக அந்தச் சித்தராலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

விமானம் உயர்ந்த கலைக்கோவில்

சோழர் காலக்கட்டடக் கலைக்கு ஒப்பாக தஞ்சைப் பெருங்கோவிலை நினைவுறுத்தும் வகையில் முப்பது அடி உயரத்தில் விமானம் நிமிர்ந்து நிற்கின்றது. அதில் சிவலிங்கங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மூலவராக தட்சணாமூர்த்தி காணப்படுகின்றார். இலங்கையில் கருவறையில் தட்சணாமூர்த்தி குடிகொள்ளும் முதற்கோவிலும் இதுதான். கருங்கல்லில் நான்கரை அடி உயரமுள்ளவராக இந்த ஞானகாரகன் விளங்குகின்றார்.

விமானத்தில் சிவலிங்கங்கள் அமைக்கப்பட்ட கோவிற்சிறப்பும் இங்குள்ள தனித்துவங்களில் ஒன்று எனலாம். ஊரெழு சண்முகநாதனின் கைவண்ணமும் தென்னிந்தியச் சிற்பக் கலைஞர் புருஷோத்தமனின் கலைவண்ணமும் திருமுருகனாரின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்துள்ளன. இதைவிட நல்லுள்ளம் படைத்த சான்றோர் பலர் நிதி வழங்கி இக்காரியம் செயற்பட உதவியுள்ளனர். ஏறத்தாழ நானூறு இலட்சம் ரூபா மதிப்பில் பணிகள் இடம்பெற்றதாக மதிப்பிட முடிகின்றது.

செதுக்கப்பட்ட திருவாசகம் : கோவிலின் உட்பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு சுவர்களில் அறுநூற்று ஐம்பத்தாறு திருவாசகப் பாடல்களும் கருங்கற்களில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன. பாரதிபுரத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞரான வினோத் என்ற கலைஞர் இந்த வரலாற்றுப் பணியைச் செய்துள்ளார். புகழுடற் சின்னங்களில் தம்கைவினையை வெளிப்படுத்திய தேர்ச்சி மிக்கவர். இன்று பக்திசார்ந்த வரலாற்றுப் பணியை மேற்கொண்டு பெருமை பெற்றுள்ளார். இதைவிடக் கிழக்கு மற்றும் மேற்குப் புற உட்பிரகாரத்தில் 108 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் 108 மணிகளும் காணப்படுகின்றன. அடியவர்கள் தங்கள் விருப்பப்படி அபிஷேகித்து ஆனந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

இதைவிட வாயிலில் சிவபுராணத்தை கிரந்தம், சீனம், தங்கோலோ, சிங்களம் முதலிய பன்னிரண்டு மொழிகளில் மொழிபெயர்த்து முப்பது அடி நீளச்சுவரில் அமைத்துள்ளனர். கோவிலில் எவ்வேளையும் திருவாசகம் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலிப்பொறிமுறையையும் ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன் திருவாசக ஆராய்ச்சி நூல் நிலையம், யாத்திரிகர் தங்கும் அறை, பூசகர் அறை, களஞ்சிய சாலை, பாகசாலை எனக் கோவிலுக்குரிய இதர அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சைவாபிமானிகளின் பெருங்கனவொன்று நனவாகியிருக்கின்றது. உலக நாடுகளில் பைபிளை வெள்ளைக் கற்களில் பதித்துள்ளனர். திருக்குரானை மகா பாரதத்தை கற்களில் எழுதிப்பதிவு செய்துள்ளதாகக் கூறுகின்றனர். சைவபக்தி இலக்கியமாகிய திருவாசகத்தைக் கற்களில் எழுதிய சாதனை யாழ்ப்பாணத்திலேயே நிகழ்ந்திருக்கின்றது.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

லாஸ் ஏஞ்சல்சில் தீபாவளி கொண்டாட்டம்

லாஸ் ஏஞ்சல்சில் தீபாவளி கொண்டாட்டம்...

மொம்பாசாவில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

மொம்பாசாவில் குழந்தைகள் தின கொண்டாட்டம்...

துபாயில் அரை மாரத்தான் போட்டி

துபாயில் அரை மாரத்தான் போட்டி ...

துபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு

துபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு ...

Advertisement
Advertisement

காரைக்குடி-மதுரை துண்டிப்பு

காரைக்குடி : காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் பாதையில் பல இடங்களில் சாலைகளில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளதால் காரைக்குடியில் இருந்து மதுரை பஸ் ...

நவம்பர் 16,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us