சுவிட்சர்லாந்தில் நூல்வெளியீடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சுவிட்சர்லாந்தில் நூல்வெளியீடு

ஜூலை 05,2018  IST

Comments

முத்தமிழ் அறிஞரான பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் எழுதியுள்ள 'திறந்த வெளிச் சிறையில் ஒரு தேசம்' எனும் நூல் சைவநெறிக்கூடுத்தின் ஏற்பாட்டில் தமிழர் களறியால் ஜூன் 30 ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் பேர்ன் நகரில் சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அமைந்திருக்கும் இடத்தில், தமிழர் களறி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.தர்மலிங்கம் சசிக்குமார் மற்றும் சண்முகலிங்கம் சபீன் கடவுள் வாழ்த்துப் பாடினர். மங்கல விளக்கினை வருகை அளித்திருந்தி சிறப்பு விருந்தினர்கள் மகாலிங்கம் (நலிவடைந்தோர் நலவாழ்வு சங்கம், சுவிற்சர்லாந்து), பார்தீபன் (தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து), சின்னத்துரை லக்ஸ்மன் (பேர்ன் தமிழ்ப்பள்ளி இணைப்பாளர்), வினாசித்தம்பி தில்லையம்பலம் (சிவஞான சித்தர்பீட நிறுவனர்களில் ஒருவர்), நந்தினி (கல்விச்சேவை பேர்ன் தமிழ்ப்பள்ளி ஆசிரியை) ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

நிகழ்வுகளை முரளிதரன் கார்த்திகா தொகுத்தளித்தார். மங்கல விளக்கேற்றலை அடுத்து நினைவுவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது. வரவேற்புரையினை சபீன் சண்முகலிங்கம் ஆற்றியிருந்தார். ஆசியுரையினை தர்மலிங்கம் சசிக்குமார் வழங்கினார். தலைமை உரையினை தில்லையம்பலம் சிவகீர்த்தி சைவநெறிக்கூடத்தின் சார்பில் ஆற்றினார்.

ச. வே. பஞ்சாட்சரத்தின் 111வது படைப்பான 'திறந்த வெளிச் சிறையில் ஒரு தேசம்' நூல் வெளியிடப்பட்டது. நூல் வெளியீட்டு உரையினை பொன்னம்பலம் முருகவேள் ஆற்றினார். நூல் மதிப்பீட்டு உரையினை ஆதிலட்சுமி சிவகுமார் வழங்கினார். சிறப்புரை ஆற்றிய தமிழ்க் கல்விச்சேவைப் பொறுப்பாளர் பார்த்திபன் இலங்கையின் வரலாற்றில் மூத்த குடிகள் தமிழர்கள் என்று சான்றுடன் நிறுவி இப்படைப்பாளி படைத்திருக்கும் இலக்கியம் தன்னைக் கவர்ந்துள்ளது என்று பதிவுசெய்தார்.

நிறைவில் நன்றியுரை ஆற்றிய ச.வே பஞ்சாட்சரம், இவ்விழா சிறக்க வருகை அளித்த அனைவருக்கும், நிகழ்வினைப் பொறுப்பேற்றிய சைவநெறிக்கூடத்திற்கும், தமிழர் களறி அமைப்பிற்கும், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி நவின்றார்.

- தினமலர் வாசகர் தில்லையம்பலம் சிவகீர்த்தி

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

ஆதரவு ஏன்? ஸ்டாலின் விளக்கம்

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழகத்திற்கு எதிரான மத்திய பா.ஜ., அரசின் செயல்களால் தான் நம்பிக்கையில்லா ...

ஜூலை 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us