ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்) | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஜூலை 08,2018  IST

Comments

 

சிகாகோவில் இயங்கி வரும் லாப நோக்கற்ற CAIFA என்ற அமைப்பும், GC VEDIC என்ற அமைப்பும் இணைந்து, ஜகத்குரு ஆதிசங்கரரின் வாழ்க்கையை “சர்வம் பிரம்மமயம்” என்ற தலைப்பில் தமிழ் நாடகமாக வழங்க இருக்கிறது.

இது வருகிற ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 5.30க்கு சிகாகோவில் லெமாண்ட் நகரில் அமைந்துள்ள் ஸ்ரீராமர் ஆலயத்தின் கலை அரங்கில் நடக்க இருக்கிறது. மகான் ஆதிசங்கரரின் பிறப்பிலிருந்து அவர் பிரம்மத்தில் கலக்கும் வரை, அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த நாடகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஆதிசங்கரரின் அவதார நோக்கம், ஆதிசங்கரரின் பிறப்பு, ஆதிசங்கரர் இளமையில் சன்யாசம் பெறுவது, வியாசருடன் விவாதிப்பது, மண்டனமிஸ்ரருடன் வாதப் போரில் ஈடுபட்டு, அவரைத் தம் சீடராக்குவது போன்ற சம்பவங்கள் இந்த நாடகத்தில் விவரமாகக் காட்டப்பட இருக்கிறது. ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை எடுத்துக் கூறும்

இந்நாடகத்திற்காக பலரும் உற்சாகத்துடன் பல வாரங்களாக பயிற்சி எடுத்து வருகின்றனர். இதற்குப் பொருத்தமான நடிகர்களாக 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் பங்கேற்கிறார்கள். அரங்க நிர்வாகத்தை, ரவிகுமார், கணேஷ் குழுவும், அரங்கப் பொருட்களை ஸ்ரீராம், ப்ரியா, இந்துவும், ஒப்பனை மற்றும் ஆடை அலங்காரங்களை சுபஸ்ரீ, அனிதா ஆகியோரும் பொறுப்பேற்று நடத்துகிறார்கள்.. இந்த நாடகத்தை எழுதி இயக்கியவர் சேகர் சந்திரசேகர். போன வருடம் இதே குழு, ராமானுஜரின் ஆயிரமாவது விழாவை முன்னிட்டு இரண்டாவது முறையாக ஸ்ரீதுஷ்யந்த் ஸ்ரீதர் (பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர்) முன்னிலையில் நடத்திய “ஏற்றம் தந்த யதிராஜர்” எனும் ராமானுஜரைப் பற்றிய நாடகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- தினமலர் வாசகர் சேகர்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி

ஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி ...

துபாயில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்

துபாயில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்...

ஹாங்காங்கில் சமஸ்கிருத வகுப்பு

ஹாங்காங்கில் சமஸ்கிருத வகுப்பு...

சிங்கப்பூரில் இசைக் கவிதை விழா

சிங்கப்பூரில் இசைக் கவிதை விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us