சென்னை மாணவிக்கு அமெரிக்க நிறுவனம் ஊக்க விருது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சென்னை மாணவிக்கு அமெரிக்க நிறுவனம் ஊக்க விருது

ஜூலை 09,2018  IST

Comments (1)

 
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் 2018 ம் ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப், சென்னையைச் சேர்ந்த 21 வயதான மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 20 பேர் பட்டியிலில் இவரும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னையிலும் மும்பையிலும் இளமைக் காலத்தை கழித்த அபர்ணா, பள்ளிப்படிப்பிலேயே சாதனை புரிபவராக விளங்கினார். கணிதத்தில் ஆர்வம் கொண்ட இவர் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்; மேலும் படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையிலும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார். ரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக்செயின் கிளப்பில் முன்னோடியாக திகழ்ந்த இவர், இந்த தொழில் நுட்பத்தை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியல் ஈடுபட்டார். மேலும் ரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான முதல் சோதனை நிலையத்தையும் ( மெக்கானிசம் லேப்) இவர் ஏற்படுத்தினார். ஓமன், மெக்சிகோ, இந்தியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பிளாக் செயின் பயிற்சி அளித்துள்ளார்.தற்போது தியேல் அறக்கட்டளை ஊக்கவிருதைப் பெறுவதன் மூலம், உலகின் தலைசிறந்த ரகசிய குறியீடு நிபுணர்கள் வரிசையில் இடம் பெறுகிறார்.


இளம் வயதிலேயே நிறுவனங்களைத் தொடங்கவும், சிறந்த பெரிய வழிமுறைகளைக் கண்டறியும் திறமையுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பெல்லோஷிப் வழங்கப்படுகிறது.


பே பால் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பேஸ்புக் அமைப்பின் துவக்க கால முதலீட்டாளருமான பீட்டர் தியேல் என்ற கோடீஸ்வரரின் ஆதரவுடன் ஒரு தனியார் அறக்கட்டளையாக தியேல் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் பெல்லோஷிப் பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் உதவித் தொகையும், தியேல் அறக்கட்டளையைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோரின் வழிகாட்டுதலும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும்.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
10-ஜூலை-201800:11:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் Blockchain தொழில்நுட்பத்தை Bitcoin போன்ற ரகசிய குறியீட்டு நாணயங்கள் போலல்லாமல், அந்த தொழில்நுட்பத்தை ஒரு தகவல் அல்லது ஆவணம் என்பதை சேமித்து வைத்து (store of value), பரிமாற்றிக்கொள்ளும் கட்டமைப்பாக (medium of exchange) மற்றும் அந்த பரிமாற்றத்தின் ஒரு தடயமாக (unit of account) பார்க்க வேண்டும் என்று கல்வியாளர்கள் சொல்கிறார்கள்.
Rate this:
0 members
1 members
16 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us