சிகாகோவில் சத சண்டி ஹோமம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிகாகோவில் சத சண்டி ஹோமம்

ஜூலை 14,2018  IST

Comments

  சிகாகோ: சிகாகோவிலுள்ள சந்த் நிரந்காரீ சத்சங்கம் என்ற ஆலயத்தில் ,பாஸ்கர பிரகாச ஆஷ்ரம் சார்பில் உலக க்ஷேமத்திற்காக சத சண்டி ஹோமம் வெகு விமரிசையாக நடந்தேறியது.அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் பல இந்தியர்கள் மட்டுமல்லாது அமெரிக்கர்களும் பங்குபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்கர ப்ரகாஷ ஆஸ்ரமத்தைச் சார்ந்த பூஜ்ய ஆச்சார்யா ஞானாநந்தா ஸ்வாமிகள் முன்னிலையில் யஞரத்னம் மற்றும் ரகு ரங்கநாதன் தலைமையில் இவ்வேள்வி நிகழ்ந்தது . ரகு ரங்கநாதன் மற்றும் அவரது துணைவியார் அகிலா ரகு கனடா மற்றும் அமெரிக்காவில் வாழும் பல இந்திய மற்றும் அமெரிக்க மக்களுக்கு வேதங்களையும் இதர ஸ்லோகங்களும் பயில்வித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளியன்று மாலை குரு பூசை மற்றும் கோ பூசை எனது தொடங்கி ,பிறகு லலிதா ஸஹஸ்ரநாம குங்கும லட்சார்ச்சனை மற்றும் மங்கள ஹாரத்தி நடந்தது. இதில் விசேஷம் என்னவென்றால் இந்தியாவில் அமைவதைப்போல் கோ பூசையிற்கு அமெரிக்காவில் பசுக்கள் உடனே அமைவது கடினம். பசுக்கள் வளர்க்கப்படும் இடங்களைத் தேடித் பிடிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை எதற்கு வரவழைக்கிறோம் என்பதை விளக்கி அவ்வுரிமையாளர்களிடம் தொடர்பு கொண்டு பல நாட்கள் முன்பே திட்டமிட வேண்டும். சமீப சில காலமாக அமெரிக்காவில் நடக்கும் பல இந்து ஆலயங்களில் கோ பூசை விமரிசையாக நடந்து வருகிறது,அமெரிக்க மக்களின் உதவியுடன்,காரணம் அவர்கள் தான் இப்பசுக்களின் உரிமையாளர்கள்.

சனிக்கிழமையன்று காலை கணபதி அதர்வஸீரீஷம் ,ஸ்ரீ ருத்ர பாராயணம் , நவாக்ஷரி மூல மந்த்ர ஜபம், சண்டி ஆவரண பூசை மற்றும் மாலையில் இவற்றுடன் கூட லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் த்ரிசதி ஆகியவை நடந்தன.

ஞாயிறு காலை கணபதி,நவகிரஹ,ராசி,திக்பாலக ஆகிய ஹோமங்களில் ஆரம்பித்து சண்டி மற்றும் ஸ்ரீவித்யா ஹோமம் மிகச் சிறப்பாக அரங்கேறின .

ஊரு கூடி வடம் பிடிக்கும் கதைக்கு இது போன்ற நிகழ்வுகளே ஓர் உதாரணம். சிகாகோவில் நடந்த இவ்வேள்வியில் அரிசோனா, மிச்சிகன், டெக்சாஸ், கலிபோர்னியா, மற்றும் கனடாவின் பல ஊர்களிருந்தும் இந்தியர்கள் தத்தம் குடும்பங்களுடன் ,இன்னும் சொல்லப் போனால் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தத்தமது பெற்றோருடன் இவ்விழாவிற்கு வருகைத தருவது மட்டுமல்லாது ,உடன் இருக்கும் சகாக்களுக்கு விமான நிலையத்திலிருந்து அழைத்து வருவது, தங்கியிருக்கும் விடுதியிலிருந்து தமது வாகனங்களில் ஆலயத்திற்கு அழைத்து வருவது போன்று உதவுவதும் சகஜம்.

சிக்காகோவின் ஒருங்கிணைப்பார்கள் அனைத்து வேளைகளிலும் அருமையான விருந்து சமைத்ததோடு மட்டுமல்லாமல் உபசரிப்பிலும் சிறந்து விளங்கினார்.

- தினமலர் வாசகி காந்தி சுந்தர்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)