ஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி

ஜூலை 14,2018  IST

Comments

ஹாங்காங் : ஹாங்காங் வானொலி நிலையம், சிறுபான்மையினருக்காக கம்யூனிட்டி பிராட்காஸ்டிங் என்ற ஒரு சேவையை அளித்து வருகிறார்கள். அதன் படி, ஹாங்காங்கில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், தங்கள் மொழியிலேயே வானொலி நிகழ்ச்சி நடத்த ஊக்குவிக்கிறார்கள்.

இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் நம்ம ஆட்கள் கலக்கினாலும் ஹாங்காங்கில் சில வருடங்களுக்கு முன்பு தமிழ்ச் சங்கம் முதன் முதலாக வானொலி நிகழ்ச்சியை தமிழில் நடத்தியது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் 13 வாரங்களுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டு, அதை ஒரு பத்து பதினைந்து பேர்கள் அமர்ந்து பரிசீலனை செய்து பின்னர் தான் ஒப்புதல் அளிப்பார்கள்.

அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நிகழ்ச்சி, வரும் சனிக்கிழமை முதல் லெட்ஸ் டாக் இன் தமிழ் (Let’s talk in Tamil) என்ற தலைப்பில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய கலந்துரையாடல் ஒலிபரப்பு துவங்குகிறது. ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் 8 மணி முதல் 9 மணி வரை நேரலையில் உலகில் எங்கிருந்தாலும் இணையத்தின் மூலம் கேட்கலாம்.

இதை கைப்பேசியிலும் கேட்க RTHK ON THE GO என்ற செயலியை தரவிறக்கம் செய்து கேட்கலாம். இதன் ஒலிப்பதிவு இணைப்பு http://www.rthk.hk/radio/index_autoplay/pthஹாங்காங்கில் இருக்கும் தமிழ் மக்களுக்கு உள்ளூர் சீன வானொலி AM621 என்ற அலைவரிசையில் ஒலிபரப்பாகும்.
- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

Advertisement
Advertisement

கிரிக்கெட்: பாக்., பேட்டிங்

துபாய்: ஆசிய கோப்பை தொடரில், பரபரப்பான இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் கான் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)