பிரான்சில் இந்திய கலாச்சார பண்பாட்டு மையம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்சில் இந்திய கலாச்சார பண்பாட்டு மையம்

ஜூலை 14,2018  IST

Comments

பாரீஸ் : பிரான்சில் இந்திய கலாச்சார பண்பாட்டு மையம் என்றழைக்கும் விவேகானந்தா மண்டபத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரான்சுக்கு வருகை தந்தபொழுது திறந்து வைத்தார். 1995ம் ஆண்டு, அப்போது முதன்மை செயளராக இருந்த நாகராஜன் மற்றும் ஷர்மா ஆகியோரின் முயற்சியால் இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. கூட்டத்துக்கு வந்திருந்த பல சங்கங்களின் பிரதிநிதிகள் ஒட்டளித்து தசரதன் தலைவர், முத்துக்குமரன் மற்றும் ராஜா முனுசாமி துணைத்தலைவர்கள், ஜொகிதர்குமார் பொருளாளர், அஜித் சர்க்கார் செயலாளர், துக்லாஸ், ஜமாலுதீன், அலன்ஆனந்தன் பொறுப்பாளர்களாகதேர்வு செய்யப்பட்டு 2ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி செயற்குழு அங்கத்தினார்களை தேர்த்தெடுக்கும் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்விழாவில் நமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்து தலைக்கோல் ராஜூ தலைமையில் மிக நேர்த்தியாக நடத்தி காண்பிக்கப்பட்டது. சென்னை பாரதி கலை மன்றத்தின் தலைவர் ரவி கல்யாணராமனின் பாரதியின் தீர்க்க தரிசனம் மற்றும் காஸ்மிக்ஸ் பற்றிய சொற்பொழிவு நேர்த்தியாகவும் பலரையும் கவர்ந்தது. இதற்கெல்லாம் முத்தாய்பாக இருந்தது இளசை சுந்திரத்தின் பேச்சு. வள்ளலார் பணி மன்றத்தின் 25ம் ஆண்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)