தினமலர் இணையதளத்தில் கவுரவ நிருபராக பணியாற்ற விருப்பமா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தினமலர் இணையதளத்தில் கவுரவ நிருபராக பணியாற்ற விருப்பமா

ஜூலை 25,2018  IST

Comments





மதிப்பிற்குரிய வெளிநாடுவாழ் தினமலர் இணையதள வாசகர்களே,வாழ்த்துக்கள்.


உங்கள் பகுதியில் உள்ள தமிழர்கள் தொடர்பான செய்திகள் படங்களுடன் தினமலர் இணையதளத்தில் வெளியாகி வருவதை அறிவீர்கள். இந்த சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் கவுரவ நிருபர்களை நியமிக்க விரும்புகிறோம்.



உங்கள் பகுதியில் நடைபெறும் தமிழர்கள் தொடர்பான அமைப்புகளின் நிகழ்வுகள், பண்டிகைகள், கோயில் விழாக்கள், சாதனை படைக்கும் தமிழர்கள் போன்ற நிகழ்வுகளை, புகைப்படங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.


குறைந்தது இத்தனை செய்திகள் அனுப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை. செய்தியை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனுப்பலாம். புகைப்படங்களை jpeg format ல் அதிகப்பட்ச resolution ல் அனுப்பி வைக்க வேண்டும்; எத்தனை படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.


நீங்கள் கவுரவ நிருபராக ஏற்கப்படும் பட்சத்தில் உங்களுக்கு தினமலர் இணையதளத்தின் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். உங்கள் செய்திகளில் ' நமது செய்தியாளர் ' என உங்கள் பெயர் குறிப்பிடப்படும்.விருப்பம் உள்ளவர்கள்


1. உங்களுடைய பெயர்


2. நீங்கள் வசிக்கும் ஊர்/ நாடு பெயர்


3. மின்னஞ்சல்/ தொலைபேசி எண்


4. புகைப்படம்ஆகியவற்றை


ilango@dinamalar.in


என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)