மொரிஷியஸ் நாட்டில் ஆடி மாத பால் குட விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மொரிஷியஸ் நாட்டில் ஆடி மாத பால் குட விழா

ஆகஸ்ட் 06,2018  IST

Comments

மொரிஷியஸ் நாட்டில் ஷய்பால் என்னும் ஊரில் உள்ள அருள் தரும் காளி பராசக்தி அம்மன் திருக்கோயிலில் ஆடி மாத பால் குட விழா, கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி அன்று மிக சிறப்பான முறையில் நடந்தேறியது. பெண்களும், சிறுமியரும் சேர்ந்து, சுமார் 75 பேர், தங்கள் தலையில் பால் குடம் ஏந்தி, அன்னை ஆதி பராசக்திக்கு வேண்டுதல் செய்து, தங்களது பிரார்த்தனைகளை நிறை வேற்றினர். பால் குடம் ஏந்தி வந்த அத்தனை பேரின் பாலை அன்னை ஆதி பராசக்தி அபிஷேகமாக ஏற்றுக்கொண்டாள்.

பாலாபிஷேகத்தினை தொடர்ந்து, சந்தன அபிஷேகம், இளநீர் அபிஷேகம், தைல அபிஷேகம், பஞ்சரமித்த அபிஷேகம் மற்றும், குங்கும அபிஷேகங்களும் செய்யப்பட்டன. பால் குடம் ஏந்துவோர், 21 நாட்கள் விரதம் இருந்து, மஞ்சள் நிற உடைகள் அணிந்து, பராசக்தி, காளி மாதா என்று முழக்கமிட்டு சன்னதியினை சுற்றி வந்ததை காணும் பொழுது, கடல் கடந்து இருக்கும், ஒரு சிறிய தீவு நாட்டில், தமிழர்களின், பாரம்பரியம் மாறாமல், தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதை காணும் பொழுது, சற்றே வியப்புற வைத்தது.

அபிஷேகங்கள் முடியும் வரை, பக்தர்களின் வீணை கச்சேரியுடன், அன்னை காளி பராசக்தியின் பெருமை பாடும் பாடல்களால் , திருக்கோயில் முழுவதும் பக்தி மனம் கமழ்ந்தது. நிகழ்ச்சியின் முடிவில், அனைத்து பக்தர்களுக்கும், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

ஷய்பால் என்னும் இடம், ரோஸ் ஹில் என்னும் குடியிருப்பு பகுதியில் இருந்து, ஒரு கல் தொலைவில் உள்ள ஒரு கடற்கரை பகுதியாகும். இக் கோயில் செல்லும் வழி எங்கும், இத் தீவு நாட்டிக்கே உரித்தான கரும்பு தோட்டங்கள் நிறைய காணப்படுகிறது. கோவிலின் இரு மருங்கில் கரும்பு தோட்டங்களும், மற்றோரு பகுதியில், நீல வான கடலும் அமைந்திருப்பது, கண் கொள்ள காட்சியே !



- தினமலர் வாசகர் ஆர்வி பாஸ்கரன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர்- 2

மல்லிகை மலர்- 2...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்...

மல்லிகை மலர்

மல்லிகை மலர்...

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்...

Advertisement
Advertisement

வால்பாறை: பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கோவை: வால்பாறை தாலுகாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாலுகாவில் ...

ஆகஸ்ட் 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us