ஹாங்காங்கில் கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங்கில் கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி

ஆகஸ்ட் 09,2018  IST

Comments

ஹாங்காங் : ஹாங்காங் வாழ் இந்தியர்கள் ஒன்று கூடி கார்கில் போரில் உயிர்தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நூற்றுக்கணக்கானோர் கூடிய இந்நிகழ்ச்சியில் பாடல்கள், பேச்சு, நடனம், கவிதை வாசித்தல், இந்திய ராணுவ வீரர்களின் தகவல்கள் வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிக்கி நார்வானி மற்றும் குழுவினரின் இறைவணக்க பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. தமிழகத்தில் இருந்து வந்திருந்த சிறப்பு பேச்சாளர்களான திருமதி.அனுபமா விஸ்வநாதன், யோக்ராஜ் பூவேந்திரன் ஆகியோர் ராணுவ வீரர்களின் பிள்ளைகளான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். யோக்ராஜ் தனது 5வது வயதில் தந்தையை இழந்தவர் என்பதால், தனது தந்தையை போல் ராணுவ வீரர் உடையில் வந்து அனைத்து இந்திய ராணுவத்தினருக்கும் மரியாதை செலுத்தினார்.

திருமதி.ஷிருஷ்டி பாஸ்கி தனது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன், இந்திய பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்க வருமாறு பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஹாங்காங்கில் காவல்துறை அதிகாரியாக பணிபுரியும் குர்ஷரன் சிங், ராணுவ வீரர்களின் கடமை பற்றியும், ஹாங்காங் மக்கள் எவ்வாறு இந்தியர்களுக்கு உதவுகிறார்கள் என்பது பற்றியும் விளக்கினார்.

மேஜர் ராகேஷ் ஷர்மாவின் பேச்சு அடங்கிய காணொலி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டு, தேசப்பற்று மிக்க பாடல்களுக்கு நடனங்கள் நடைபெற்றது. பிரவசி சம்மான் விருது பெற்ற திருமதி.புர்விஷ் ஷரோப் இந்நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டனர். விஸ்வ ஹிந்து பரிசித், இந்து ஸ்வயம்சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புக்களைச் சேர்ந்த பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

உணர்ச்சிபூர்வமான உரைகளை உன்னிப்பாக கேட்ட அனைவரும், ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மனநிறைவுடன் விடைபெற்றுச் சென்றனர். ஜெய்ஹிந்த் என்ற தலைப்பில் கடந்த 6 ஆண்டுகளாக வானொலியில் நிகழ்ச்சி தயாரித்து, வழங்கி வரும் வானொலி தொகுப்பாளர் திருமதி. ஜெயா விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர்- 2

மல்லிகை மலர்- 2...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்...

மல்லிகை மலர்

மல்லிகை மலர்...

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்...

Advertisement
Advertisement

வால்பாறை: பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கோவை: வால்பாறை தாலுகாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாலுகாவில் ...

ஆகஸ்ட் 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us