சிங்கப்பூரில் ஆடிப்பெருக்கு கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

ஆகஸ்ட் 09,2018  IST

Comments

சிங்கப்பூர் : சிங்கப்பூர் ஆலயங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. தொபாயோ அருள்மிகு வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ துர்க்கையம்மனுக்கு விசேஷ ஹோமங்களும் மற்ற பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. தாலிப் பெருக்குப் பூஜை , வைரத் தாலி ஆலய வலம் வந்தபோது பக்தர்கள் “ ஓம் சக்தி ...ஓம் சக்தி “ சரண கோஷம் முழங்கியது மெய் சிலிர்க்க வைத்தது. ஆகஸ்டு ஐந்தாம் தேதி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்குப் பூச் சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பூச்சொரிதலில் அம்பாள் அலங்காரம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பக்தர்கள் பக்தி சிரத்தையோடு பால் குடம் எடுத்து ஆலயம் வலம் வந்தனர். பின்னர் அம்பிகைக்குப் பால் குட அபிஷேகம் நடைபெற்றது.ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலிலும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சர்வ அலங்கார நாயகியாக அம்பிகை திருவிதி உலாவாக செம்பவாங் கடற்கரை அடைய அங்கு அம்பிகையின் அருளாசியோடு மங்கல மகளிர் தாலி திருத்திக் கொண்டு தாங்கள் சுமங்கலிகளாகத் திகழ வழிபட்டனர். கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமையப் பிரார்த்தித்தனர். எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தப் பெருமக்கள் உற்சாகத்தோடு பெருமளவில் கலந்து கொண்டு ஸ்ரீ பராசக்தியின் அருள் பெற்றுச் சென்றனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர்- 2

மல்லிகை மலர்- 2...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்...

மல்லிகை மலர்

மல்லிகை மலர்...

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்...

Advertisement
Advertisement

கேரளாவுக்கு உதவ முன்வர வேண்டும்

புதுச்சேரி : கேரளாவுக்கு உதவ புதுச்சேரி மக்கள் முன்வர வேண்டும். சிறிய மாநிலமாக இருந்தாலும் கேரளாவிற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. புதுச்சேரி சட்டசபை ...

ஆகஸ்ட் 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us