ரியம்பெல் திரௌபதி அம்மன் கோயில் பச்சை காவடி பால் குட திரு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரியம்பெல் திரௌபதி அம்மன் கோயில் பச்சை காவடி பால் குட திரு விழா

ஆகஸ்ட் 13,2018  IST

Comments

மொரிஷியஸ் நாட்டில், ரியம்பெல் என்னும் ஊரில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பச்சை காவடி பால் குட திரு விழா ஆகஸ்ட் மாதம் 12 ம் தேதி அன்று, மிக சிறப்பாக நடந்தது. பட்டெட் என்னும் ஆற்றங் கரையில், அம்மனுக்கு பூஜை மற்றும் அலங்காரம் செய்து, தேரில் அமர்த்தி, ஊர்வலம் தொடங்கினர். பக்தர்கள் பலர், அலகு குத்திக் கொண்டும், சிலர், தென்னங் கீற்றில் செய்யப்பட்ட காவடியினை தலையில் சுமந்து கொண்டு, பாத யாத்திரையாக ஊர் எல்லையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர்.

வழி நெடுகிலும், குடியிருப்போர் பலர், அம்மனை வரவேற்று, பூஜைகள் செய்து வழிபட்டனர். கோவிலில், அம்மனுக்கு, சிறப்பு பூஜைகளும், மஹா ஆர்த்தியும், நடந்தேறியது. இவ் விழாவிற்கு, அக்கம் பக்கம் ஊரில் இருந்து, திரளான தமிழர்கள் பங்கு கொண்டது, மிக சிறப்பான அம்சமாகும்.

ரியம்பெல் என்னும் ஊர், போர்ட் லூயிசில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இது, கடல் மட்டத்தில் இருந்து, சுமார் 250 அடி உயரத்தில், மலைகளால் சூழப்பட்ட ஒரு அழகிய ஊர். பட்டெட் என்பதற்கு, இங்கு பேசும் கிரியோல் மொழியில், சர்க்கரை வள்ளி கிழங்கு என்று பொருள். இங்கு ஓடும் பட்டெட் என்னும் ஆறு, ஒரு வற்றாத ஜீவ நதி என்று, ரியம்பெல் ஊரை சேர்ந்த திரு சஞ்சய் என்பவர் கூறினார். இங்கு, தமிழ் பேசும் மக்கள் பலர் வசிக்கின்றனர். கரும்பு பயிர் மற்றும், காய்கறி பயிர்கள், இவர்களின் வாழ்வாதாரம்.




- தினமலர் வாசகர் ஆர்வி பாஸ்கரன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)