இலண்டன் கனக துர்கா அம்மன் ஆலயம் தேரோட்டத் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இலண்டன் கனக துர்கா அம்மன் ஆலயம் தேரோட்டத் திருவிழா

ஆகஸ்ட் 16,2018  IST

Comments (1)

இலண்டன் கனக துர்கா அம்மன் ஆலயம் தேரோட்டத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது, 

‘ஈலிங்’ என்பது இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனில் உள்ள ஒரு பகுதியாகும். இங்கு எண் 5, ‘சாப்பேல்’ சாலை, று13 9யுநு என்ற இடத்தில் கனக துர்கா ஆலயம் அமைந்துள்ளது. மீனாட்சிம்மன் சமேத சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கும் இத்திருத்தலம் ‘கனக துர்கா ஆலயம்’ என்று அழைக்கப்படுகின்றது. 

10.08.1991 ஆம் ஆண்டு கணபதி,அம்மன்,முருகன் ஆகிய மூன்று அருள்மிகு தெய்வப் படங்களை மட்டும் வைத்து, ‘வெம்புலிசவுத் ஹால்’ என்ற இடத்தில் முதல்; பூஜை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமை அன்று பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாக இங்குள்ள குருக்கள் குறிப்பிட்டார்கள். திருக்கோவிலின் வளர்ச்சி சிறப்பாக இருந்ததாகவும், 1995 ஆம் ஆண்டு இப்போது இருக்கும் ‘ஈலிங்’ என்ற இந்த இடத்தில் இடம் வாங்கப் பெற்று உற்சவர் துர்கையை மட்டும் வைத்து வழிபாடு செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். 1999 ஆம் ஆண்டு இத்தலத்தின் முதல் கும்பாபிசேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 12 வருடங்கள் தொடர்ந்து பிரமோற்சவம் நடைபெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு இரண்டாவது கும்பாபிசேகம் மிகச் சிறப்புடன் நடைபெற்றுள்ளது. தற்போது தினமும் இத்தலத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.


இத்தலத்தில் இந்த ஆண்டு தேரோட்டத் திருவிழா 12.08.2018 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேர் வரும் வீதியில்,தேருக்கு முன்பாக பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்தனர்;. தேரின் பின்புறம் மெய்யன்பர்கள் வீதி முழுவதும் அங்கப் பிரதட்சணம் செய்து வந்தனர். வினாயகர்,முருகன்,கனகதுர்கா ஆகிய அருள்மிகு தெய்வங்கள் தனித்தனியாக மூன்று தேர்களில் வீதி வலம் வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. கணக்கிலடங்கா மக்கள் கடல் அலை போல் திரண்டு வந்து இத்திருவிழாவினைக் கண்டு களித்தனர்.

இத்திருக்கோவிலின் வளாகமோ ஜனசந்தடி மிகுந்த இடம். பொதுவாக இலண்டனில் சாலையின் ஓரங்களில் தங்களின் வீடுளுக்கு முன்பாகவே தங்களது வாகனங்களை மக்கள் நிறுத்துவதுண்டு. இது போன்ற இடங்களிலும் அம்மன் தேரில் பவனி வருகிறாள் என்பதை காணும் போது பெரும் வியப்பு மேலிட்டது என்று கூறினால் அது மிகையாகாது.

தேரோட்டத்தின் போது அன்னதானம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்னம் பாலிப்பு அருள் பாலிப்பு அல்லவா? அன்னதானம் நடைபெறும் இடத்தில் ஒவ்வொருவரும் நீண்ட வரிசையில் தனித்தனியாக வந்து உணவினைப் பெற்று, அவ்உணவினை உண்ணும் பாங்கு மிகவும் பாராட்டதலுக்குரியதாக இருந்தது. மற்றவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வண்ணம் இருந்ததோடு மட்டுமல்லாமல்,இடத்தினையும் மிகச் சுத்தமாக வைத்திருந்த விதம் அனைவரையும் மிகவும் கவர்ந்தது என்று கூறலாம். இதற்காக திருத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு பூங்கா வளாகம் முழுவதும் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த பூங்காவில், தமிழ்நாடடில் கோவில் திருவிழா காலக்கட்டத்தில் புதியதாக கடை விரித்திருப்பது போன்று பல்வேறு வியாபார ரீதியான கடைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் காபி,தேனீர், ஐஸ்கிரீம், மோர், சர்பத், நெல்லிக்காய் ஜுஸ்,தண்ணீர், போன்ற குளிர்பான பொருட்களும் ஆங்காங்கே இலவசமாக வினியோகிக்கப்பட்டன.

திருத்தலத்தின் வளர்ச்சிக்காக இலண்டன் வாழ் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, இலங்கைத் தமிழ் மக்களும் பெரும் பங்கு வகித்தனர் என்பதனை கண்கூடாக நாம் காணலாம். தாய்திரு நாட்டின் பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் இத்திருத்தலத்தில் முக்கிய மூலவராக கனகதுர்க்கை அம்பாள் அருள்பாலிக்கின்றார்கள். அம்மன் சன்னதிக்கு முன்பு கொடிமரம் உள்ளது. கொடிமரத்திற்கு அருகில் வினாயகரைத் தரிசிக்கலாம். நின்ற கோலத்தில் கொலு வீற்றிருக்கும் அம்மனை தரிசித்த பின் அம்மன் சன்னதியை வலம் வருகின்றோம். கனகதுர்கை அம்மனின் கோஷ்டத்தில் அருள்பாலிக்கும் இலக்குமி, நாகபூசனி அம்மன் சரஸ்வதி ஆகிய அருள்மிகு தெய்வங்களின் மூர்த்திகளையும் நாம் கண்டு வணங்கிடலாம். இவ்வாறு வலம் வரும் போது நாம் தரிசிக்க இருக்கும் தெய்வம் மற்றும் ஒரு வினாயகர் ஆவார். இங்கு தனிசன்னதியில் அமைந்திருக்கும் வினாயகப் பெருமான் பெரிய உருவத்தில் காட்சியளிக்கின்றார். சன்னதி சிறியதாக இருந்தாலும் வினாயகரின் உருவம் பெரியதாகவும் மிகவும் அழகாகவும் இருப்பதைக் காணலாம். இவருக்கு அடுத்து நாம் தரிசிக்க இருப்பது எம்பெருமான் சுந்தரேஸ்வரர். சுந்தரேஸ்வரின் அருகில் அதே சன்னதியில் மீனாட்சியம்மனை தரிசிக்கலாம். சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சற்று பின்புறம் கிருஷ்ணர் மற்றும் இராதவை வழிபடுவதற்கு திருஉருவச் சிலைகள் உள்ளன.

இதற்கு அடுத்த சன்னதியில் அருள்மிகு சத்ய இலட்சுமி சமேத வீற்றிருக்கும் அருள்மிகு நாராயணனை கண்டு வணங்கிடலாம். அடுத்து இருப்பது அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னதி. அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத அருள்பாலிக்கும் சுப்பிரமணியர் தனியொரு சன்னதியில் அழகுடன் காட்சியளிக்கின்றார். அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு புகைப்படத்தினால் படத்தை ஒரு சட்டம் தயார் செய்து மாட்டியுள்ளனர்.

அம்பாள் சன்னதியின் வலப்புறத்தில் வரிசையாக குருவாயூரப்பன், சிவகாமசுந்தரி, நடராஜர்,அய்யப்பன்,நால்வர் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவகிரகம், பைரவர் ஆகிய அருள்மிகு தெய்வங்களை வழிபடலாம். தேர்திருவிழாவினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால்குடங்கள் பெறுவதற்கு பிரத்தியோக பெரிய பாத்திரங்கள் திருத்தலத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் காலை 07.00 முதல் 22.30 மணி வரை. மேலும் விவரங்களுக்கு திருக்கோவிலின் தொலைபேசி எண் 0208 810 0835.

- தினமலர் வாசகர் ச பொன்ராஜ்


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
ponpuni - Chennai,India
17-ஆக-201800:44:45 IST Report Abuse
ponpuni லண்டன் ஈலிங் கனக துர்கா ஆலயம் தேரட்டோம் செய்தி பிரசுரம் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன் ச.பொன்ராஜ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us