லேகோசில் ஆடி கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லேகோசில் ஆடி கொண்டாட்டம்

ஆகஸ்ட் 14,2018  IST

Comments

லேகோஸ், நைஜீரியா: கோடை விடுமுறைக்காக தாய்நாடு சென்ற பெரும்பாலான குடும்பங்களை பிரிந்து லேகோஸ் சற்று தொய்வோடு காணப்பட்டது உண்மைதான். கொண்டாட்டத்தையும், உற்சாகத்தையும் மீட்டெடுக்க ஆடி வந்தது ஆடி மாதம்.

விழா காலம் துவங்கிய எண்ணம் வந்துவிட்டது. முதல் திருநாளாக ஆடி கிருத்திகை (5.8.18) முருகன் அருளோடு துவங்கியது. காலை 10 மணிக்கு துவங்கிய சிறப்பு அபிஷேகம் மனதுக்கு இதமளித்தது. விபூதி காப்பில் வென்மை முகமும் தங்க கவசம் அணிந்த ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். சுமார் 12 மணி அளவில் மஹா நைவேத்தியமாக சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், கேசரி மற்றும் சுண்டல் பிரசாதமாக வைக்கப்பட்டது. மஹா தீபாராதனையும் முடிந்தவுடன் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


இம்முறை அன்றைய தினம் மாலையும் முற்றிலும் மாறுபட்ட கோலத்தில், முருகனுக்கு விஷேசமான சந்தன காப்பில் காட்சி அளித்தார். சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து மஹா தீபாராதனை 8 மணி அளவில் நடைபெற்றது.

ஆடி மாதம் ஒவ்வொரு தரம் போல் விளக்கு பூஜை மற்றும் கூழ் ஊற்றுதல் வெள்ளி கிழமை அல்லாது ஞாயிற்றுக்கிழமை (12.8.18) பக்தர்கள் தத்தம் குடும்பத்துடன் வந்து பங்கேற்கும் வகையில் ஏற்பாடாகி இருந்தது. துர்க்கைக்கு சிறப்பு அலங்காரம் வேப்பிலை கொத்து ஆசனத்தில், பச்சை வண்ண உடையில் பூ மற்றும் வளையல் மாலைகள் கழுத்தை அலங்கரிக்க பிரகாசமாக காட்சி அளிக்க மெய் சிலிர்த்தது. கையில் தீ சட்டியுடன் தத்ரூபமாய் அருள் பாலித்தார்.

காலை 9 மணிக்கு ஆரம்பமான விளக்கு பூஜை 10 30 வரை நீடித்தது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அக்ஷ்தோத்திரம் படித்து தத்தம் விளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்தார்கள் தமிழ் பெண்கள். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீ மஹிஷாஸூரமர்த்தினீ ஸ்தோத்திரம், ஸ்ரீ காமாட்சி துக்க : நிவாரணி பாராயணம் செய்தனர்.

இதற்கிடையே அம்மனுக்கு கூழ் நைவேத்தியம் சமர்ப்பிக்க ஆயத்தமாக இருந்தார்கள். மண் மற்றும் வெங்கல பானையில் பொங்கல் செய்து படைத்தார்கள்.


விளக்கு பூஜை செய்தும் கூழ் சமைத்தும் அம்மன் அருள் வேண்டி வீடு மற்றும் உலக செழிப்பிர்க்கும், அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் லேகோஸ் வாழ் தமிழர்கள் பிரார்த்தனை செய்தனர். பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ்க்குடியினர் கூடி மகிழ்ந்தது துர்க்கையின் கடைக்கண் பார்வை பட்டதால் என்றே நினைக்கத் தோன்றியது.

- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

Advertisement
Advertisement

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 4 பேர் பலி

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த நோயாளி மற்றும் ஒரு பெண் உட்பட 4 பேர் பலியானார்கள். ...

நவம்பர் 18,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)