கோலாலம்பூரில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கோலாலம்பூரில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்

ஆகஸ்ட் 21,2018  IST

Comments

மலேஷியா வாழ் தமிழர் (இந்திய குடியுரிமை) சங்கம் சார்பில் மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏராளமான இந்திய தமிழர்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்றது. கோலாலும்பூர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா பள்ளியில் உள்ள கந்தையா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியா தூதரக ஆலோசகர் நிஷித் குமார் உஜ்வால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

காலை 8.30 மணி அளவில் தொடங்கிய விழாவில், இந்திய தேசிய கோடி ஏற்றம், குழந்திகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, பேச்சு போட்டி, சுதந்திர போராட்ட வீரர்கள் போன்று வேடமணிந்து குழந்தைகள் பங்குபெறும் மாறுவேட போட்டி மற்றும் வந்தேமாதரம் வாதியா இசை நிகழ்ச்சி, இந்திய தேசிய கீதம், கொடி பாடல், குழந்தைகள் குழு நடனம், ஒளிபடைத்த கண்ணினாய் வா - குழந்தைகள் குழு பாடல், கோலாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யபட்டது. விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டது.

மலேஷியா வாழ் தமிழர் (இந்திய குடியுரிமை) சங்கம் ஏற்பாடுசெய்த விழாவிற்கு மலேசியாவில் அமைந்துள்ள நிறுவனங்களான, உச்ண்தூஞததூஞதூஞு.ஞிணிட் , பிரிக்பீல்ட்ஸ் மெடிவிரான், வெஸ்டர்ன் யூனியன், அசோகா உணவகம், நாடியா மற்றும் மலபார் கோல்ட் ஆதரவு அளித்திருந்தனர்.

-நமது செய்தியாளர்: வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)