சான் ஆண்டோனியோ தமிழர்களின் இன்பச் சுற்றுலா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோ தமிழர்களின் இன்பச் சுற்றுலா

ஆகஸ்ட் 23,2018  IST

Comments

என்னதான் வருடம் முழுவதும் நம் மக்கள் ஆங்காங்கே சந்தித்துக் கொண்டாலும், நம் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்யும் உல்லாசமான ஒரு சுற்றுலாவில் சந்தித்து, குலாவி, விளையாடி, உண்டு மகிழ்வதற்கு ஈடு இணை ஏது !

சான் ஆண்டோனியா தமிழ்ச் சங்க சார்பில்  'ரேமாண்ட் ரசல் பூங்காவில்' ஆகஸ்ட் நான்காம் தேதி இன்பச் சுற்றுலா நடந்தது. குழந்தைகளை மகிழ்விக்க, ரப்பர் குதிப்பான்கள், முக ஓவியங்கள், குழு விளையாட்டுக்கள் என பலவும், முக்கியமாக ஊர் விட்டு ஊர் வந்து, மறந்து போன- கோலிக் குண்டு,பம்பரம்,டயர் பால், நாக்கெர் பால்-என பலவும் வைத்து, 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே 'என மகிழ்ந்தனர், நெகிழ்ந்தனர் !!


நடுநடுவே தண்ணீர், நீர்மோர், கூழ், லெமன் ஜூஸ், சாட் ஐட்டம்ஸ் என கொடுக்கப் பட்டன. சோலார் சைக்கிள் பற்றிய ஒரு அறிவியல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதனிடையில் முந்தைய மாதங்களில் நடந்த சிறுவர்-சிறுமியர்களுக்கான போட்டிகள் மற்றும் பெரியவர்களின் கிரிக்கெட் போட்டிகளில் வாகை சூடியவர்களுக்கு 'வெற்றிக் கோப்பைகள்' வழங்கப்பட்டன.

சுற்றுலாவின் 'ஹை லைட்' என டின்னரைச் சொல்லலாம் ! எக் போண்டா, சிக்கன் ஸ்னாக்ஸ், சுண்டல், வெஜ்-நான் வெஜ் பிரியாணி, ஆறு வகையான தோசை, ஐஸ் கிரீம் என அசத்தி விட்டனர். மொத்தத்தில் புத்துணர்ச்சி ஊட்டி, அடுத்த சுற்றுலா எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன் விடைபெற்றோம்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us