சிங்கப்பூரில் புத்தகப் பரிசளிப்பு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் புத்தகப் பரிசளிப்பு விழா

ஆகஸ்ட் 22,2018  IST

Comments




சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆனந்த பவன் உணவக ஆதரவுடன் நடத்திய மு.கு.ராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசளிப்பு விழா ஆகஸ்டு 18 ஆம் தேதி ஆனந்த பவன் உணவக வளாக அரங்கில் நடைபெற்றது. திருமதி பானுமதி ராமச்சந்திரா குத்து விளக்கேற்ற நித்யஸ்ரீ ஷியாம்குமார் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. ஆண்டுதோறும் சிங்கப்பூரில் வெளியிடப்படும் கட்டுரை – சிறுகதை – கவிதை நூல்களில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குவதை எழுத்தாளர் கழகம் வழக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாண்டுக்கு சுழற்சி முறையில் கட்டுரை நூல் பரிசளிக்கப்பட நூல்கள் வரவேற்கப்பட்டன. இப்போட்டிக்கு எட்டு நூல்கள் வந்தன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க சிங்கப்பூர் – மலேசியா – இந்தியாவிலிருந்து நடுவர்கள் நியமிக்கப்பட்டனர். சென்னையிலிருந்து போராசிரியர் தா. தங்கராசா – மலேசியாவிலிருந்து வே.சபாபதி – சிங்கப்பூரிலிருந்து எஸ்.ஜெகதீசன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு நூல்களை ஆய்ந்து ஒருமனதாக சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றும் மா.ராஜிக்கண்ணு எழுதிய “ சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி – வரலாற்று நோக்கில் “ ( 1950 – 2009 ) என்ற நூல் இவ்வாண்டுக்கான பரிசு பெறும் நூலாகத் தேர்ந்தெடுத்தனர். பரிசாளருக்கு 2000 சிங்கப்பூர் வெள்ளி ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகத் தலைமை நிர்வாகி ரா.அன்பரசு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பலத்த கரவொலிக்கிடையே நூலாசிரியருக்குப் பொன்னாடை – மாலை அணிவித்து பரிசுத் தொகையையும் வழங்கி கௌரவித்தார். நூலாசிரியர் தக்க வகையில் ஏற்புரை நல்கினார். விழாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுக்குச் சேவையாற்றி வரும் பானுமதி ராமச்சந்திராவுக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்பு விருந்தினர் கவுரவித்தார். கவிஞர் ந.வீ.விஜயபாரதி வாழ்த்துப் பா வாசித்துப் பெருமைப்படுத்தினார். விழாவுக்கு கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை ஏற்றார். நடுவர்களின் ஆய்வறிக்கையைத் துணைத் தலைவர் துரை.மாணிக்கம் வாசித்தார். விழாவில் நூல்களை அனுப்பிய எழுத்தாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஒன்பதாவது ஆண்டாக இப்புத்தகப் பரிசளிப்புப் போட்டியை நடத்தி எழுத்தாளர் கழகம் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத் தகுந்ததொன்றாகும். விழாவைத் துணைச்செயலாளர் கிருத்திகா நெறிப்படுத்தினார். பொருளாளர் எஸ்.முத்து மாணிக்கம் நன்றி நவில இரவு அறுசுவை விருந்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.



- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்




Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

Advertisement
Advertisement

புழல் சிறையில் கைதி உயிரிழப்பு

திருவள்ளூர் : புழல் சிறையில் கேரளாவைச் சேர்ந்த கைதி தாமஸ் உயிரிழந்துள்ளார். வலிப்பு நோய் மற்றும் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

செப்டம்பர் 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us