ஹுஸ்டனின் பிரமாண்ட உபநயனம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹுஸ்டனின் பிரமாண்ட உபநயனம்

ஆகஸ்ட் 27,2018  IST

Comments

 

டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டனில் ஸ்ரீ சிருங்கேரி வித்யா பாரதி நிறுவனத்தின் ஆவணியாவட்டம், இங்கு உடுப்பி கிருஷ்ணா விருந்தாவன் கோவிலில் இருநூறு நபர்கள் கலந்துகொண்ட விழா ஆகஸ்ட் 25 ஆம் தேதி மிக விமரிசையாக நடைபெற்றது. அவ்விழாவில் பங்குகொண்ட நண்பர் ஆனந்த் கணபதியின் திருப்திகரமான அனுபவத்தில் இருந்து சில வார்த்தைகள்:

இதில் வயதானவர்கள், தலைப்பூணூல் போட்டுக்கொள்ளும் சிறுவர்கள் என தமிழ்,தெலுங்கு,கன்னடம் என மொழி பேதமின்றி தங்கள் வழிவந்த பழக்கத்திற்கேற்ற முறையில் வந்து சிரத்தையாக நியமனங்களைச் செய்தனர். ஹூஸ்டனின் பல பகுதிகளிலிருந்து தங்கள் குடும்பத்துடன் பலர் பங்குகொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இவர்களை ஒருங்கிணைத்து நடத்திக் கொடுத்தவர் சிருங்கேரி மஹாசந்நிதானம் ஆச்சாரியர்களுடனேயே பயணித்த கல்யாணகிருஷ்ண கனபாடிகள் என்பது மிகச் சிறப்பான விஷயம் !

இந்தியாவில் நடக்கிறதா,,ஹூஸ்டனில் நடக்கிறதா என பிரமையூட்டும் விதமாக குறிப்பிட்ட நேரத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள்-குருவந்தனத்தில் தொடங்கி, ப்ரம்மயக்ஞம், மஹாஸங்கல்பம், உபகீதம், தேவரிஷி தர்ப்பணம், தந்தை இல்லாதவர்களுக்க பித்ரு தர்ப்பணம், காண்டரிஷி தர்ப்பணம் என அனைத்து நியமனங்களும் மிகச் சிறப்புடன் நிகழ்த்தப்பட்டது.

காலையில் வந்த அத்தனைபேர்களுக்கும் காலை உணவு வழங்கப் பட்டது. பூணூல் முடிந்ததும் பிரசாதங்களும் வழங்கப் பட்டன. மங்களகரமான இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. இத்தனை விமரிசையாக, சிரத்தையாக, அனைவரையும் ஒருங்கிணைத்து, அடுத்த தலைமுறையினரும் கற்றுக் கொள்ள வழி செய்து, சிறப்பாக நடத்திக் கொடுத்த ஆச்சார்யாளுக்கு நன்றி.


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)