கேரளா வெள்ள நிவாரண பணியில் சான் ஆண்டோனியோ இந்தியர்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கேரளா வெள்ள நிவாரண பணியில் சான் ஆண்டோனியோ இந்தியர்கள்

ஆகஸ்ட் 27,2018  IST

Comments

  

‘தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும்' என்பதற்கு ஏற்ப ,கேரளாவின் வெள்ளம் பற்றிக் கேட்ட பல செய்திகளும்,பார்த்த வீடியோக்களும் நமக்கு மனம் பதைபதைத்து, கண்ணீர் பெருக்கெடுக்க வைத்தது உண்மை! இயற்கையே,, இத்துடன் உன் சீற்றத்தை நிறுத்தி விடு என வேண்டிக் கொண்டோம். வேண்டுதலோடு நிற்காமல் உலகமெங்கும் வாழும் இந்திய மக்கள்,அனைத்தையும் இழந்து நிற்கும் நம் மக்கள் துயர் துடைக்க நிதியுதவி சேகரிக்க ஆரம்பித்தனர். அதில் தங்களின் மனிதாபிமானத்தைக் காண்பித்தனர். அப்படி ஒரு நற்செயலில் சான் ஆண்டோனியோவின் பங்கும் மிகச் சிறந்ததே ! அதனை பொறுப்புடன் ஏற்றுக்கொண்டு,உரிய நேரத்தில் உடன் இருந்து பேருதவிகள் செய்த அத்தனை சகோதர சகோதரர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் !

இங்கு பல குழுக்கள் மூலம் நிதி திரட்டப் பட்டது. நம் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் தன்னார்வலராக முன்வந்து குழுக்கள் உருவாக்கினர். சிலர் தனிப்பட்ட முறையிலும் நேரடியாக நிதி அனுப்பிவைத்தனர். ஸ்ரீநிவாசன் கண்ணப்பனின் கல்லூரி நண்பர் பிரவீண், அவர் குடும்பம் மற்றும் நண்பர்கள் குடும்பங்களும் இணைந்து கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களத்தில் நேரடியாக இறங்கி செயலாற்றியது உண்மையான மனிதாபிமானச் செயலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு !

சான் ஆண்டோனியோவின் அனைத்திந்திய சங்கம், மலையாள சங்கத்துடன் இணைந்து ( கெளதம் ராஜன்,வினோத் மேனன் மற்றும் மோகன் மேனன் ) ஐயாயிரம் டாலர்களுக்கும் மேலாக நிதி திரட்டித் தரப்பட்டது. அசோக் ஆண்டப்பன் சவேரியர்பாளையம் அரிமா சங்கத்தின் மூலம் அனுப்ப ஐநூறு டாலர்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

சான் ஆண்டோனியோவின் 'சேவா' அமைப்பினர், டாக்டர்.ஹேதல் நாயக் மற்றும் அவர்கள் குழு, அமெரிக்க 'சேவா' அமைப்புடன் இணைந்து, 184 ,000 டாலர்கள் நிதி திரட்டி 'சேவா இன்டர்நேஷனல் பாரத்' என்ற அமைப்பிற்கு அனுப்பிவைத்தனர்.

இன்னும் நிதிதிரட்டுதல் நடந்துகொண்டே உள்ளது கூடவே பிரார்த்தனைகளும் !



விரைவில் கேரளா மக்களின் வாழ்க்கை பழைய நிலமைக்குத் திரும்பும் என்றே நம்புவோம்.


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

Advertisement
Advertisement

புதுச்சேரி ரயில் நேரம் மாற்றம்

புதுச்சேரி:புதுச்சேரி-புதுடில்லி விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ...

நவம்பர் 20,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us