தாம்பா நகரில் இந்திய சுதந்திரதின விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தாம்பா நகரில் இந்திய சுதந்திரதின விழா

ஆகஸ்ட் 28,2018  IST

Comments

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் தாம்பா நகரில் வசித்து வரும் இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது தாய் நாட்டின் 72வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். இவ்விழாவில் தாம்பாவில் மட்டுமில்லாது, புளோரிடாவின் பிற பகுதிகளில் இருந்தும் பெரும் திரளான மக்கள் பங்கு கொண்டு தங்கள் தாய்நாட்டின் மீது உள்ள தேசப்பற்றை வெளிக்காட்டினர்

விழாவில் தாம்பா நகர காவல் துறை உயரதிகாரி Chad Chronister தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். இக்கொண்டாட்டத்தின் மிக முக்கிய பகுதியாக, அமெரிக்க தேசிய கொடியை தலைமை விருந்தினர் Chad Chronister ம், இந்திய தேசிய கொடியை Federation Of Indian Association தலைவர் மாதவி சேகரமும் நிர்வாக குழு தலைவர் ராம்நாராயணனும் இணைந்து ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.

இவ்விழாவினை Federation Of Indian Association ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை ஜிகிஷா தேசாயும் ஜெய் சந்திரனும் தலைமை ஏற்று நடத்தினர். ஒவ்வொரு வருடமும்Federation Of Indian Association முன்னின்று நடத்தும் இந்த நிகழ்ச்சியில்Voice of FIA, fancy dress competition மற்றும் பல வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. கல்லூரி செல்லும் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் சிறந்த கல்வி மற்றும் சமூக சேவைகளை பாராட்டி பதக்கங்களும் மற்றும் கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது. பெரும்பாலான கலை நிகழ்ச்சிகள் இந்தியாவின் சிறப்பையும் பெருமையையும் உணர்த்தும் பொருட்டு வடிவமைக்கபெற்றிருந்தன

- தினமலர் வாசகர் ரமேஷ் வாசுதேவன்
Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

Advertisement
Advertisement

ஒவைசிக்கு காங்கிரஸ் கண்டனம்

ஐதராபாத்: தெலுங்கானாவின் நிர்மல் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசும்போது, இந்த கூட்டத்தை ரத்து செய்ய ...

நவம்பர் 20,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us