சிங்கப்பூர் முஸ்லிம் லீக் மகளிர் தேசிய தின கருத்தரங்கு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் முஸ்லிம் லீக் மகளிர் தேசிய தின கருத்தரங்கு

ஆகஸ்ட் 28,2018  IST

Comments




சிங்கப்பூர் முஸ்லிம் லீக் நாட்டின் 53 ஆவது தேசிய தின விழாவை “ பெண்களே சாதிக்கலாம் வாங்க “ என்ற கருப் பொருளைக் கொண்ட மகளிர்


கருத்தரங்காக மிகச் சிறப்பாக நடத்தியது. முஸ்லிம் லீக் துணைத் தலைவர் அ.முகம்மது பிலால் அறிமுகம் செய்து வரவேற்று தொடக்கவுரை ஆற்றினார். லிஷா பெண்கள் பிரிவைச்சேர்ந்த ஜாய்ஸ் கிங்ஸ்லி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஹேமா பிரபாகரன் படங்கள் மூலமாக மகளிர் நலன் பற்றிய கருத்துக்களை விரித்துரைத்தார். ஹேமலதா மித்ரா குடும்பப் பெண்களின் சவால்களும் சமாளிப்பும் பற்றிக் குறிப்பிட்டதோடு அமரர் லீ குவான் இயூ வலியுறுத்திய பாலியல் நல்லிணக்கத்தைக் கற்றுத் தர வேண்டிய அவசியத்தை விளக்கினார். புதிய நிலா ஆசிரியர் மு.ஜஹாங்கிர் உரையாற்றுகையில் பெண்களின் தன்னலமற்ற தியாகத்தை நினைவு கூர்ந்தார். முஸ்லிம் லீக் சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் ஆலோசகரும் பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஹாஜி எம்.ஒய்.முகம்மது ரஃபீக் தேசிய கீதம் பாடி தேசிய தினப் பற்றுறுதி நிகழ்வை நடத்தி வைத்தார். காதர் முஹைதீன் – முகம்மது அலி ஆகியோர் தன்னம்பிக்கைப் பாடல்களைப் பாடி அசத்தினர். மாணவி ஃபரீஜ் நிகழ்வினைச் சுவைபட நெறிப்படுத்தினார்.


நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்




Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி; ஐம்பெரும் விழா

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி; ஐம்பெரும் விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில்

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில் ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)