கேரள மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கேரள மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி

ஆகஸ்ட் 29,2018  IST

Comments

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
கன மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு, நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (கே-டிக்), குவைத் வாழ் தமிழர்கள் இரண்டு மணி நேரத்திற்குள் அள்ளி வழங்கிய ஒரு இலட்சம் இந்திய ரூபாயை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிடம் ஒப்படைத்தது.
நம் குவைத் வாழ் தமிழ் சகோதரர்களின் கொடையுள்ளம் பார்போற்றத் தக்கது. நிறைவான உதவியைத் தாராளமாக வழங்கிய பெருமக்களுக்கும், அதற்காக முன் நின்று உழைத்த சகோதர, சகோதரிகளுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இவர்கள் அனைவருக்கும், இனியும் உதவிகளை வழங்க இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கும் அருளாளன் அல்லாஹ் வளமான வாழ்க்கையை இம்மையிலும், சுகந்த சுவனத்தை மறுமையிலும் அருளி, பிரதிபலன் வழங்குவானாக!
https://m.facebook.com/story.php?story_fbid=2190516837688806&id=365350416872133
நன்றி! வஸ்ஸலாம்.
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)+965 9787 2482www.k-tic.com- குவைத்திலிருந்து பறங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

Advertisement
Advertisement

2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், சோபோர் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு ...

செப்டம்பர் 25,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)