குவைத் தமிழோசை கவிஞர் மன்ற சிறப்பு கலை-இலக்கியக் கூட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத் தமிழோசை கவிஞர் மன்ற சிறப்பு கலை-இலக்கியக் கூட்டம்

ஆகஸ்ட் 31,2018  IST

Comments

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் 148-ம் மாதாந்திர சிறப்பு கலை-இலக்கியக் கூட்டமானது வெகு விமரிசையாக நடைபெற்றது. சப்பானியத் தமிழாய்வறிஞர் பேரா.சுசுமு ஓனோ நூற்றாண்டு நினைவரங்கத்தில் (ஃபோக் அரங்கம், மங்காஃப், குவைத்) ஆகஸ்து மாத சிறப்புகளுடன் ( தியாகப் பெருநாள்-பக்ரீத் பண்டிகை மற்றும் 72-ம் இந்திய விடுதலை நாள்) நடந்த கூட்டமானது காலை 10:30 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மிடுக்குடன் துவங்கப் பெற்றது.

தமிழோசையின் காப்பாளர் குழு உறுப்பினர்-மூத்த கவிஞர் விட்டுக்கட்டி மஸ்தான் கூட்டத்தின் அவைத்தலைமையேற்றார்.டிவிஎஸ் சுமையஞ்சல்(கார்கோ மற்றும் டிராவல்ஸ்) நிறுவனத்தின் மேலாளரும் குவைத்-இந்தியன் ஃப்ரண்ட்லைனெர்ஸ் சமூக அமைப்பின் செயலாளருமான வெங்கட மதி சிறப்பு விருந்தினராய்ப் பங்கேற்றார்.அவரைத் தமிழோசை நிர்வாகிகள் இணைந்து அணி செய்தனர். குவைத் வாழ் இந்தியர்களுக்கு மதி ஆற்றும் அயராத் தொண்டுகள் குறித்து அனைவரும் சிலாகித்தனர்.

தனது ஏற்புரையில் மதி அவர்களும் தமிழோசையின் தொடரும் தண்டமிழ்ப் பணிகள் குறித்தும் 'மாதந்தோறும் மகிழ்வோம்!'கூட்டங்கள் பற்றியும் மிகவும் பாராட்டிப் பேசினார்.

மன்றத்தின் தலைவர் இராபர்ட் ரெத்தினசாமி வரவேற்புரையாற்றி, கொள்கைப் பாடலையும் பாடி எழுச்சியூட்டினார்.தொடர்ந்து மன்றத்தின் உறுப்பினர்கள் வழங்கிய சிந்தை தூண்டும் கவிதைகளாலும் செவிக்கினிய இன்னிசைப் பாடல்களாலும் அரங்கம் ஆனந்தத்தில் அமிழ்ந்தது.திரளான புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகப் படுத்தி,கவிதைகள் கூறி, உரையாற்றினர்.

தியாகத் திருநாளின் சிறப்புகள் குறித்து வெற்றியூர் மகிழன் விளக்கினார்.சுதந்திர தின சிறப்புக் கவிதைதனை கவிஞர்.நாகராஜன் வழங்கினார்.உலகத் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பாடல் பாடப்பெற்றது.தமிழிசை அறிஞர் தஞ்சை.ஆபிரகாம் பண்டிதரின் இணையற்ற தண்டமிழ்த் தொண்டுகள் பற்றித் ஆரூர் வாசு இராமநாதன் சிறப்புரையாற்றினார்.


சப்பானியத் தமிழாய்வறிஞர் பேரா.சுசுமு ஓனோ நூற்றாண்டு நன்றியுடன் நினைவு கூறப்பட்டது."சர்க்கரைச் சாறே சங்க இலக்கியம்"என்ற இலக்கியச் சிறப்புரையில் மன்றத்தின் பொதுச் செயலாளர் கவி.பட்டுக்கோட்டை சத்யன் ஆகஸ்ட் மாத தமிழறிஞர்கள் குறித்து எடுத்துரைத்தார்.


தொடர்ந்து இராபர்ட் தலைமையில் பள்ளிச் சிறார்கள் இந்திய விடுதலைநாள் பேரணியாய் கொடிதாங்கி வலம் வந்தனர்.அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.மன்றத்தின் கௌரவத் தலைவர் கவிஞர்.சா.சாதிக் பாட்சா அணு ஆயுதங்களின் பேரழிவு பற்றியும்,ஜப்பான் மீதான ஹிரோஷிமா-நாகசாகி அணுகுண்டு வீச்சு அவலத்தின் கொடுந்துயரம் குறித்தும் தன்னுரையில் உருக்கமாய் விளம்பினார்.

மன்றப் பொருளாளர் கவி.சம்சுதீன் 'பெண்கள் நம் கண்கள்' என்ற தலைப்பில் கவிபாடினார்.நிகழ்வின் முத்தாய்ப்பாய் "இணையற்ற இவரின்று...இந்தியத் தமிழராய் இயம்பினால்...!" என்ற தலைப்பிலான "ஒப்புயர் ஒப்பனைக் கவியரங்கம்" சிறப்பாய் நடந்தேறியது.


கவியரங்கக் கட்டியம் கூறுவார்:"பூலித்தேவனாக"-மன்றத் துணைச்செயலாளர் மன்னை இராஜா, "தீரர் சத்திய மூர்த்தியாய்" பட்டுக்கோட்டை சத்யன்,"தோழர் ஜீவாவாய்" கவி.பட்டுக்கோட்டை பாலு,"தியாகி கக்கனாய்"கவி.பாண்டி மற்றும் "எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அம்மையாராய்" ஜோசஃபின் இராபர்ட் ஆகியோர் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துக் கவிபாடி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டனர்.தமிழோசையின் மூத்த செயற்குழு உறுப்பினர் சத்திரமனை அசன் முகமது நன்றியுரை நவின்றார்.இறுதியில் அறுசுவை விருந்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

- தினமலர் வாசகர் பட்டுக்கோட்டை சத்யன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)