மொரிஷியஸ் நாட்டில், இந்தியாவின், 72 வது சுதந்திர தின விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மொரிஷியஸ் நாட்டில், இந்தியாவின், 72 வது சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 31,2018  IST

Comments

மொரிஷியஸ் நாட்டில், இந்தியாவின், 72 வது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதரகத்தின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில், இந்தியாவின், வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் ஜெனரல் விஜய் குமார் சிங் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஜம்போ என்னும் இடத்தில உள்ள இந்திரா காந்தி தேசிய கலை பண்பாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த , இந்த நிகழ்ச்சியில், காலை 9 மணிக்கு, மூவர்ணக் கொடியினை, வி கே சிங் ஏற்றி, மரியாதை செலுத்தினார்.

அவர் தனது உரையில், கடல் கடந்து இருக்கும், நட்பு நாடான இங்கு, பல நூறு பேர்கள், மழை, குளிரை பொருட் படுத்தாது, நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக வந்திருந்த, இந்திய மக்கள் மற்றும், வம்ச வழியினரை பார்த்து, பெருமை படுவதாக கூறினார். இந்திய நாடு, பல துறைகளில் முன்னேற்றம் அடைந்து வரினும், முன்னேற்றத்திற்கு தடைக்கற்களாக இருக்கும் காரணிகளை கண்டறிந்து, அதனை, தகர்த்தெறிந்து முன்னேற்றம் பெறுவதே, இன்றைய பொழுதில், நமது லட்சியமாக இருக்க வேண்டுமென கேட்டு கொண்டார்.

நிகழ்ச்சியில், பள்ளி மாணவியரின் இசை மற்றும் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. வன்முறை கொடுமையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்த பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சி, பார்ப்போர் அனைவரையும் கவர்ந்தது. சுமார் 500 க்கும் மேற்பட்டோர், மொரிஷியசின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்தது, குறிப்பட்ட தக்கது,




- நமது செய்தியளர் ஆர்.வி.பாஸ்கரன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)