மலேசியா பத்து மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியா பத்து மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

செப்டம்பர் 01,2018  IST

Comments

கோலாலம்பூர் : மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியசாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேக விழா ஆகஸ்ட் 31 அன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஆக.,26 ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. பல்வேறு சிறப்பு யாகங்கள், பூஜைகளைத் தொடர்ந்து ஆக.,29 அன்று யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்றன. கும்பாபிஷேக நாளாக ஆக.,31 அன்று காலை 7.30 மணியளவில் அடிவாரத்தில் அமைந்துள்ள கணேசர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆறுபடை வீடு முருகன், சனீஸ்வரர் கோயில் விமானங்கள், புதிய ராஜகோபுரம் மற்றும் மூல மூர்த்திகளுக்கும் யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களுடன் மேல்குகையில் அமைந்துள்ள வேலாயுதர், வள்ளி-தெய்வானை முருகன், இடும்பன் கோயில்கள் விமானம், ராஜகோபுரம், மூலமூர்த்திகளுக்கு சுவர்ண பந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மலையிலும், அடிவாரத்திலும் குவிந்து, அரோகரா கோஷம் எழுப்பி முருகப் பெருமானை வழிபட்டனர். மலைக்கு செல்லும்படிகள் பல்வேறு வண்ணங்களால் வர்ணம் பூசப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது காண்போரை கவரும் விதமாக இருந்தது.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)