கனடாவில் சந்தவசந்த இணையக் குழு சந்திப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கனடாவில் சந்தவசந்த இணையக் குழு சந்திப்பு

செப்டம்பர் 05,2018  IST

Comments

கனடா, மிஸ்ஸிஸாகாவில் கவியோகி வேதம் ஏற்பாட்டில், அவரது மகன் ஸ்வாமிநாதன் இல்லத்தில், சந்தவசந்த இணையக் குழுவின் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சி அதில் கலந்து கொள்பவர்கள் பற்றியும், சந்தவசந்தத் தலைவர் கவிமாமணி இலந்தைராமஸ்வாமி கவிதை மூலம் கூறினார்.

அரங்கில் முதலில், மூன்று கவிஞர்களுக்கு “கவிப்பெருஞ்சுடர்” விருதுகள் வழங்கப்பட்டன.கவிஞர்கள் வேதம், பசுபதி, அனந்த் ஆகியோர் விருது பெற்றனர். “சிவசிவா”வின் சார்பில் (அமெரிக்கா) தலைவரே அவருக்கு அளிக்கப்பட்ட“பாவலர்மணி” விருதுப் பட்டயத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதற்கடுத்து,“இயலிசைஅரங்கம்” நடைபெற்றது. கவிஞர்கள் அநந்த் , பசுபதி, இலந்தை வேதம் ஆகிய மூவரும் தாங்கள் எழுதிய இசைக்கவிதைகள் பற்றிப் பேசி அவற்றின் ஒலியையும் (பாடல்மூலம்)இசைத்துக் காட்டினர்.

அடுத்து “சித்திரவிசித்திரங்கள்” எனும் புத்தக வெளியீடு, பேராசிரியர் சங்கரன் தலைமையில் நடைபெற்றது. புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு கவிஞர் சௌந்தர் விரிவான மதிப்புரை நிகழ்த்தி, ஒரு சிறப்பான “மிறைப்பா”வையும் வழங்கினார். இலந்தை, வேதம், பசுபதி ஆகியோர் முறையே.“விருத்தம்எழுத வருத்தம் எதற்கு? “கவி யோகியின் அற்புதப்படைப்புகள்”, “சங்கச்சுரங்கம்”நூல்கள் பற்றி பேசினர். கவிப்பெருஞ்சுடர் அநந்த் நன்றியுரைக்குப் பிறகு, பிரபா ஸ்வாமிநாதனின் சுவையரங்கத்துடன் விழா நிறைவுற்றது.

- தினமலர் வாசகர் கவிமாமணி இலந்தை ராமஸ்வாமி

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

Advertisement
Advertisement

கருணாசை காவலில் எடுக்க மனு

சென்னை: முதலமைச்சர் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதா தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கருணாஸ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 7 நாள் ...

செப்டம்பர் 24,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us