மொரிஷியஸ் தலைநகரில் மதுரை மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மொரிஷியஸ் தலைநகரில் மதுரை மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

செப்டம்பர் 05,2018  IST

Comments

போர்ட் லூயிஸ்: மொரிஷியஸ் தலை நகர் போர்ட் லூசில் மதுரை மாரியம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான முன்னேற்பாடுகள் விநாயகர் வழிபாட்டுடன், லட்சுமி ஹோமம், பஞ்சகாவ்யா பூசைகளுடன் துவங்கி, யாக கால பூசை, சுமங்கலி பூசை, கன்யா பூஜை, எண்ணை காப்பு, மற்றும் மூன்று கால பூசைகளுடன் முடிவடைந்து, 4 ஆவது கால பூசை மற்றும் மஹா பூர்ணாஹுதியுடன், எல்லா பூசைகளும் முடிவடைந்தன.

விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, நவகிரஹ சன்னதி மற்றும் மூல சுவாமி ஆகிய, மாரியம்மன் சன்னதிகளுக்கு, ஓம் சக்தி, பாரா சக்தி கோஷங்கள் விண்ணை முழங்க, ஒரே சமயத்தில், சிவாச்சாரியார்கள், பூசை செய்த புனித நீரை, கலசங்களுக்கு, அபிஷேகம் செய்து வைத்தனர். தமிழ் கலாச்சாரப்படி, தவில் மற்றும், நாதஸ்வர வித்வான்களின் ஒலி நயனத்துடன், கும்பாபிஷேக நிகழ்வு நடந்தது. தமிழ் நாட்டில் இருந்து ஐந்து சிவாச்சாரியார்கள், இந்த திருப்பணிக்காக, மொரிஷியசிற்க்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

- நமது செய்தியாளர் ஆர்.வி.பாஸ்கரன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)