சிட்னியில் இனிய இலக்கியச் சந்திப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிட்னியில் இனிய இலக்கியச் சந்திப்பு

செப்டம்பர் 05,2018  IST

Comments

சிட்னி: சிட்னி தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சார்பில் “இனிய இலக்கியச் சந்திப்பு” கழகத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வாக நடைபெற்றது.

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சிட்னியில் உருவாக்கப்பட்ட தினம் தொட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழி மற்றும் கலைகளுக்கான ஆக்கபூர்வமான செயற்பாட்டைச் செய்து வருகின்றது. இந்த அமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகள் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசப்பட்டு நிற்பதோடு அவற்றின் அடி நாதமாக விளங்குவது நமது மொழி மற்றும் கலைகளுக்கான களம் என்பதே. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்களையும், இங்கே பிறந்து வளர்ந்த தலைமுறையையும் இலக்கு வைத்தே இந்த நிகழ்வுகளைத் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் முன்னெடுத்து வருவது வெள்ளிடை மலை.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி நிகழ்ந்த “இனிய இலக்கியச் சந்திப்பு” தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வாக அமைந்திருந்தது. தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் அனகன் பாபு வரவேற்புரையோடு யதுகிரி லோகதாசன் குழுவினர் வழங்கிய தமிழிசைப் பாடல்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வில் முதலில் தமிழகத்தின் இளம் பேச்சாளர் சுமதி ஸ்ரீயின் கலகப்பான நடையில் “தமிழர் தம் பெருமையும் வாழ்வும்” என்ற உரையை வழங்கினார். இடைவேளைக்குப் பின் அடுத்த அமர்வு தொடங்கியது.

தமிழகத்தின் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் “யாமறிந்த புலவரிலே” என்ற தலைப்பில் பேசத் தொடங்கினார். மேடையை விட்டுக் கீழிறங்கிச் சபையோருக்குச் சமமாக நின்று பேசினார்.

“பாரதியின் மூன்றாவது பிள்ளையாக பாரதியால் கொண்டாடப்பட்ட யதுகிரி அம்மாள் மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் புதல்வி. பாரதி பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர் அந்த யதுகிரி, இந்த யதுகிரியோ பாரதியின் பாடல்களைப் பாடியது எவ்வளவு சிறப்பு. பாரதி யதுகிரிக்குப் பாடிய கும்மிப் பாடல்களையும் இங்கே பாடியிருக்கலாம்” என்று ஆதங்கப்படார்.

பாரதி கிருஷ்ணகுமாரின் உரை பாரதியை மையப்படுத்தி திருக்குறளில் இருந்து கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் என்று இதிகாசங்களையும், காப்பியங்களையும் தொட்டுச் சென்றது. இந்தத் தமிழுரையே மூன்று, நான்கு ஆய்வு நூல்களைப் படித்த திருப்தியைச் சபையோருக்கு ஏற்படுத்தியது.

பாரதியின் இளமைப் பிராயத்தில் எதிர் கொண்ட சவால்கள் தான் அவரின் உன்னத இலக்கியங்களுக்குத் திறவுகோலாயின என்று வரலாற்றைப் புரட்டிப் போட்டவர் “உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற திருக்குறளுக்கு மெய் விளக்கத்தைச் சொன்ன போது வியப்பும் நிறைவும் ஏற்பட்டது கேட்டோருக்கு.

பேச்சாளர்கள் பாரதி கிருஷ்ணகுமார், சுமதிஶ்ரீ ஆகியோரை சிட்னி வாழ் தமிழறிஞர்கள் திருநந்தகுமார், கவிஞர் நந்தி வர்மன், அருச்சுனமணி, தமிழ் மாமன்றத்தின் சூசை பெஞ்சமின் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கிக் கெளரவித்தனர்.

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் அனகன் பாபுவுடன் கழக உறுப்பினர்கள் சக நிகழ்ச்சித் தொகுப்பாளர் காந்திமதி தினகரன் ஆகியோர் செயலாளர் கர்ணன் சிதம்பரபாரதியின் நன்றியுரையுடன், நிகழ்வைத் திறம்பட நடத்தி முடித்தனர்.

- தினமலர் வாசகர் கானா பிரபா

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

Advertisement
Advertisement

கவர்னருடன் அற்புதம்மாள் சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை ராஜிவ் கொலையாளியான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின் அற்புதம்மாள் ...

செப்டம்பர் 24,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us