சிங்கப்பூரில் மகாகவி பாரதியார் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் மகாகவி பாரதியார் விழா

செப்டம்பர் 10,2018  IST

Comments

 “ சொல் புதிது பொருள் புதிது சுவை புதிது - எந்நாளும் அழியாத மாக் கவிதை தந்து – தமிழ்நாட்டுக்கு கவியரசர் இல்லை எனும் வசை என்னால் ஒழிந்தது “ என்று பிரகடனம் செய்த மகாகவி பாரதியார் தம் பாடல்களில் எங்கெல்லாம் புதிய சொற்களைப் படைத்திருக்கிறார் என்பதைத் தம் தொண்ணூறு நிமிடப் பேச்சில் அற்புதமாகப் பட்டியலிட்டுக் காட்டினார் தமிழகத் தன்முனைப்புப் பேச்சாளர் சுகி.சிவம். 

சிங்கப்பூர் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் செப்டம்பர் 9 ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்திய மகாகவி பாரதியார் விழாவில் சிறப்புரை ஆற்றுகையில் மகாகவி வார்த்தையால் எழுதியவன் அல்ல – உணர்வால் எழுதினான் என்று கூறியதோடு தீரன் செண்பகராமனின் தேசபக்த மாவீரத்தையும் எடுத்தியம்பினார்.

ஸ்வப்னா ஆனந்த் – சூர்யா ஆனந்த் ஆகியோரின் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா கோலாகலமாகத் தொடங்கியது. சிங்கப்பூர் இந்திய வர்த்தக - தொழிற்சபைத் தலைவர் டாக்டர் டி.சந்துரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்வமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கே.பரதன் உரையாற்றுகையில் 1924 ஆம் ஆண்டு துவங்கிய இந்நிறுவனம் ஆற்றும் பல்வேறு சேவைகளைக் குறிப்பிட்டதோடு சிங்கப்பூர் இந்தியர்கள் தொழில் தொடங்கவுள்ள சாத்தியக் கூறுகளை விவரித்து தங்களை அணுகுமாறு வேண்டு கோள் விடுத்தார். “ இளையர்களின் பார்வையில் பாரதியார் “ என்ற தலைப்பில் காணொளிக் காட்சிகளின் துணையோடு அருள் ஓஸ்வின் சிற்றுரை ஆற்றினார். 

முன்னதாகத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் வரவேற்புரையாற்றுகையில் “ சிங்கப்பூர் தேசிய தின விழாவையொட்டிப் பிரதமர் ஆற்றிய உரையில் இந்திய சமுதாயத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை “ என்ற இந்திய சமுதாயத்தின் ஆதங்கத்தைப் பத்திரிகைகள் சுட்டிக் காட்ட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். 

விழாவில் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் “ தமிழ்மணி “ இதழ் வெளியிடப்பட்டு பார்வையாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அரங்கம் நிரம்பி வழிந்து மேடையையும் ஆக்கிரமித்துக் கொண்ட பார்வையாளர்களிடையே நடைபெற்ற மகாகவியின் விழாவை ஆர்.ஜி.நிர்மல் மற்றும் ராஜகுமாரி ஆகியோர் நெறிப்படுத்தினர். ஏற்பாட்டுக் குழுத் தலைவி வசந்தம் ராஜீ நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)