குவைத் பாவேந்தர் கழகத்தின் “களம்-67” மாதாந்திர நிகழ்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத் பாவேந்தர் கழகத்தின் “களம்-67” மாதாந்திர நிகழ்வு

செப்டம்பர் 16,2018  IST

Comments

 
குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-67” மாதாந்திர நிகழ்வு, அண்ணாதுரை 110 வது பிறந்த நாள்விழா சிறப்பு நிகழ்ச்சியாக மங்காஃப் பாவேந்தர் அரங்கில் கடந்த 07-09-2018 வெள்ளி மாலை 6.00 மணிக்குத் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. பிரியதர்ஷினி குமரேசன் நிகழ்வை மிகச்சிறந்த முறையில் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர் பொறியாளர் கேசவராஜா. நடராஜன் (தலைவர்) முன்னிலை வகிக்க விழா இனிதே தொடங்கியது. மஞ்சுளா, பிரியா கண்ணன், கயல்விழி தமிழ்த்தாய் வாழ்த்தும், மஞ்சுளா களப் பாடலும் பாடினார்கள்.


குறளோடுஉறவாடு – வாசு இராமநாதன் (பொதுச் செயலாளர்) மிகச் சிறந்த முறையில் குறளுக்கு விளக்கம் கொடுக்க களைகட்டியது களம். நினைந்து நினைந்து – “மகாகவி பாரதியார்” பற்றிய நினைவுகளை சாந்தகுமார் சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார். நிகழ்வில் இடையில் மஞ்சுளா துரைசாமி, இராமகிருஷ்ணன், சண்முகம். குணா ஆகியோர் இனிமையான பாடல்களை வழங்கினார்கள்.அடுத்த நிழ்வாக, சிறப்பு விருந்தினர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது. கேசவராஜா, பாவேந்தர் கழகத்தின் செயல்பாடுகளையும், தமிழ்த்தொண்டுகளையும், கலைநிகழ்ச்சிகளையும் வெகுவாகப் பாராட்டினர். மேலும் நமது உடலையும் மனதையும் எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டும் எனவும் சிறப்பான முறையில் எடுத்துச்சொன்னார்.


இனிதினும் இனிது: சிறப்பு நிகழ்ச்சியாக கருத்தரங்கம் நடந்தேறியது தலைப்பு: “அருந்தமிழால் போற்றுவோம்” அதில் தலைவராக தமிழறிஞர் வாசு ராமநாதன், ' அரசியல்' என்ற தலைப்பில் கவிஞர் தாரா, சொற்ப்பொழிவு என்ற தலைப்பில் பொறியாளர் பத்பநாதன், கலைப்படைப்புகள் என்ற தலைப்பில் புலவர் அழகர் சண்முகம் சிறப்பான கருத்துக்களை எடுத்துவைத்தனர். இதில் தலைவராக இருந்த தமிழறிஞர் வாசு இராமநாதனின் தலைமையுரை ஆழமான கருத்துக்களோடு இருந்தமையால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியின் நிறைவாக பாரதின் வாழிய செந்தமிழுடன் சுவையான இரவு விருந்தை பாவேந்தர் கழகம் வழங்க, விழா இனிதே நிறைவேறியது.


- தினமலர் வாசகர் வாசு ராமநாதன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)