மலேசியாவில் விநாயகர் பிரம்மோற்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் விநாயகர் பிரம்மோற்சவம்

செப்டம்பர் 13,2018  IST

Comments

கோலாலம்பூர் : மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் கம்போங் பந்தன் பகுதி ஸ்ரீ கணேச் ஆலயத்தில் செப்டம்பர் 5 ம் தேதி துவங்கிய செப்டம்பர் 14 வரை விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதில் நாள்தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிசேக, அலங்காரங்கள் செய்யப்பட்டது. தினமும் மாலையில் கணேசர், சிம்ம வாகனம், பூத வாகனம், ஹம்ச வாகனம், மயூர வாகனம், புஷ்ப பல்லக்கு, ரிஷப வாகனம், அஸ்வ வாகனம் ஆகியவற்றில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செப்டம்பர் 12 ம் தேதி சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளிய விநாயகர், வீதி உலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக 10 ம் நாஸ் திருவிழாவான செப்., 13 விநாயகர் சதுர்த்தி அன்று, காலையில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிசேகங்களும், தீர்த்தவாரியும் நடைபெற்றது. பின்னர் ராஜ அலங்காரத்தில் விநாயகர் திருக்காட்சி அளித்தார். காலையில் இந்திர வாகனத்திலும், மாலையில் கஜ வாகனத்தில் வீதி உலா வந்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர். பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான செப்.,14 அன்று வெள்ளி மூஷிக வாகனத்தில் காட்சி தந்த கணேபதிக்கு சூர்னோற்சவம், ரக்ஷவிசர்சனம் ஆகியன நடத்தப்பட்டன. விழாவில் நாள்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)