இலண்டனில் கர்நாடக இசை விழா நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இலண்டனில் கர்நாடக இசை விழா நிகழ்ச்சி

செப்டம்பர் 18,2018  IST

Comments

இலண்டனில் பாரதீய வித்யா பவன் அரங்கத்தில் அபர்ணா இராஜாவின் கர்நாடக சங்கீத இசைநிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இசை விழாவின் போது இலண்டன் சார்ந்த கலை அமைப்பில் ஒன்றான மானசம்மித்திரவின் நிறுவன உறுப்பினர் சுப்பிரியா நாகராஜன் முக்கிய அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார்கள்.

இசையில் அபர்ணா இராஜாவிற்கு குருவாக திகழும் இராஜி கோபாலகிருஷ்ணன் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்; இராஜி கோபாலகிருஷ்ணன் தனது இசைதிறனை சென்னையில் வளர்த்துக் கொண்டதோடு, அமெரிக்கா,கனடா போன்ற இடங்களில் இசைக் கலைக்கு அரும் பணியாற்றி வருகின்றார். இவரிடம் அபர்ணா இராஜா ‘ஸ்கைப்’ வாயிலாக சங்கீதம் பயின்று முதன் முதலாக தனது குருவினை இசைவிழா நடத்தும் தருணத்தில் தான் சந்தித்துள்ளார்.இசை நிகழ்ச்சியின் போது அபர்ணா பாடிய பாடல் பாபவினாசம் சிவன் கீர்த்தியி;ன் ‘காண கண் கோடி வேண்டும்’ என்ற பாடலாகும். இதன் இராகம் கம்போஜி. ஆதி தாளம். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற நிகழ்சியில் அனைத்துப் பாடல்களும் எல்லோரையும் கவர்ந்தன.


⦁ அங்கயற்கண்ணி, கிரி பிரியம் விஷமகார கண்ணன மற்றும் தில்லானா -ஆதி தாளம்


⦁ வர்ண முக்கவ - ரூபகம் தாளம்


⦁ ஓம் நமோ நாராயணா - கண்ட சப்பு


போன்றவைகள் குறிப்பிடத்தக்க பாடல்களாகும்.

நிகழ்ச்சியில் வயலின்- ஜோதிஸ்னா ஸ்ரீகாந்த், மிருதஙகம்- குரு இராகவேந்திரன், கஞ்சிரா- அபிராம் சகாதேவன், மோர்சிங்- கந்தையா சிதம்பரநாதன், தம்புரா- ஹிராமயி சுதர்சனன்

இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்த அனைவரும் இசை மழையில் மூழ்கினர். நமது நாட்டின் கலை,பண்பாடு இங்கிலாந்திலும் கொடிகட்டிப் பறக்கின்றது என்பதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகளாய் விளங்குகின்றன என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.


- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

அக்டோபர் 28 ல் உலக அமைதி தினம்

அக்டோபர் 28 ல் உலக அமைதி தினம்...

அக்டோபர் இறுதி வரை ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்

அக்டோபர் இறுதி வரை ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்...

இலண்டன் வெம்புலி ஈழபதீஸ்வரர் ஆலயம்

இலண்டன் வெம்புலி ஈழபதீஸ்வரர் ஆலயம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)