இலண்டனில் வினாயக சதுர்த்தி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இலண்டனில் வினாயக சதுர்த்தி

செப்டம்பர் 18,2018  IST

Comments (1)

இலண்டனில் ஸ்ரீசாய்பாபா திருத்தலத்தில் 10 நாட்களாகக் கொண்டாடப்பட்டது; இலண்டனில் ஈஸ்ட்ஹாம் எண் 122, லே தெரு, இல்போர்டு என்ற இடத்தில் ஸ்ரீரடி சாய் பாபாவின் திருத்தலம் அமைந்துள்ளது. உலக ஸ்ரீரடி சாய்பாபா அமைப்பின் மூலம் பல்வேறு இடங்களில் சாய்பாபா திருத்தலங்கள் நிர்வகிக்கப்பட்டு, சாய் பாபாவுக்குரிய அனைத்து வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றது.

இந்துக்களின் பாரம்பரிய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் வினாயக சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாடி வருவது வழக்கம். வினாயகர் பிறந்த இந்நன்னாளை நாம் பிள்ளையார் சதுர்த்தி என்றும் அழைப்பது உண்டு.இவ்விழா இலண்டனில் ஸ்ரீசாய்பாபா திருத்தலத்தில் 10 நாட்களாகக் கொண்டாடப்பட்டது. வினாயகசதுர்த்தி சுக்ல பட்சத்தில் ஆரம்பிக்கப்பட்டு அனந்து சதுர்த்தியான பத்தாவது நாள் இறுதி நாள் விழாவாகக் இங்கு கடைபிடிக்கப்படுகின்றது. இந்த பத்து தினங்களும்;, இறைவனின் அனுக்கிரகம் கிடைக்கும் பொருட்டும்,தங்களது வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் தீரும் பொருட்டும் முழு நம்பிக்கையோடு வினாயக பக்தர்கள் வினாயகரை வழிபடுவதை நாம் இங்கு காணலாம். தங்களது வீடுகளை அலங்கரித்து, வினாயகருக்கு பிடித்தமான மோதகம் கொழுக்கட்டை,இனிப்பு,பழ வகைகள் ஆகியவற்றைப் படைத்து வழிபடுகின்றனர்.


வினாயகர் முதலில் மகாபாரதத்தின் எழுத்துப் பணியினை ஆரம்பித்து, பின் வேத வியாசருடன் இணைந்து மகா பாரதத்தை, பத்து நாட்களில் முழு மூச்சுடன் செயல்பட்டு,எவ்வித ஆகாரமும் நீரும் உண்ணாமல் பருகாமல் எழுதி முடித்துள்ளனர் என்று புராணம் குறிப்பிடுகின்றது. இதனால் உடலில் நீர் சத்து குறைவு ஏற்பட்டதால் வினாயகரின் உடல் முழுவதும் களி மண் பூசப்பட்டு நதி நீரில் அவரை முழுகச் செய்து அவரது உடல் குளிர்ச்சி அடைவதற்கு வினாயகரே வற்புறுத்தப்படுகின்றார்.


இதன் காரணமாக நாம் வினாயகரை ஒவ்வொரு ஆண்டும் வினாயகர் சதுர்த்தி தருணத்தில் நதியிலோ கடலிலோ கரைக்கும் சம்பிரதாயம் ஏற்பட்டது. எனவே இலண்டனில் உள்ள ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலத்தில் வினாயக சதுர்த்தி விழா 23.09.2018 கணேச விசார்கன் என்ற பெயரில் முடிவடைய இருக்கின்றது.


- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

அக்டோபர் 28 ல் உலக அமைதி தினம்

அக்டோபர் 28 ல் உலக அமைதி தினம்...

அக்டோபர் இறுதி வரை ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்

அக்டோபர் இறுதி வரை ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்...

இலண்டன் வெம்புலி ஈழபதீஸ்வரர் ஆலயம்

இலண்டன் வெம்புலி ஈழபதீஸ்வரர் ஆலயம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
ponpuni - Chennai,India
18-செப்-201814:21:49 IST Report Abuse
ponpuni தினமலரில் இலண்டனில் நடந்த விநாயகர் சதுர்த்தி பற்றிய எனது செய்திக்குறிப்பினை வெளியிட்டது மிக்க மகிழ்ச்சியினை தருகின்றது. நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ச.பொன்ராஜ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us