மனதை வருடிய சுமித்ரா வாசுதேவின் சாஸ்திரீய சங்கீதம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மனதை வருடிய சுமித்ரா வாசுதேவின் சாஸ்திரீய சங்கீதம்

செப்டம்பர் 18,2018  IST

Comments

ரசிகாஸ்NZ மற்றும் சங்கீத பாரதி இணைந்து ஆக்லாந்து எப்சம் பாய்ஸ் கிராமர் ஸ்கூலில் ஆக்லாந்தில் உள்ள கர்நாடக இசை பிரியர்களுக்கு ஒரு மாபெரும் இசை விருந்து அளித்து மகிழ்வித்தார்கள். சங்கீத கலாநிதி வேதவல்லியின் பிரதம சிஷ்யையான சங்கீத கலா ரத்னா சுமித்ரா வாசுதேவின் இசைகச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரோடு இணைந்து ஸ்மிதா- வயலின், கணபதி ராமன்- மிருதங்கம் வாசித்தார்கள். முதலில் ரசிகாஸ்NZ சார்பில் பிரதியுஷா இனிமையாக கலைஞர்களை வரவேற்று பேசினார்.

முதலில் சாமா ராகத்தில் அமைந்த வர்ணத்தோடு கச்சேரி துவங்கி பின் தியாகராஜரின் மாய மாளவ கெள்ள ராகத்தில் துளசிதலமுலசே என்ற கிருதியோடு கச்சேரி களை கட்ட ஆரம்பித்தது.. பின் பத்ராசல ராமதாஸரின் கமாஸ் ராகத்தில் 'எவரெனு நன்னுப்ரோவைய்யா க்ருதியை தொடர்ந்து பூர்விகல்யாணி ராகத்தை சற்றே விரிவாக ஆலாபனை அழகாக செய்து பாபநாசம் சிவனின் 'க்ஷீர சாகர சாயி' என்ற க்ருதியை நிரவல் ஸ்வரங்களுடன் இனிமையாக பாடினார்.

அடுத்து ஷ்யாமை சாஸ்திரியின் யதுகுலகம்பஹாதியில் ஸ்வரஜதி முடித்து பின் பாபநாசம் சிவனின் ஆபேரி ராகத்தில் 'காந்த வந்தருள்', தியாகராஜரின் கானடா ராகத்தில் சாகேதனிகேதன என்ற பாடலை தொடர்ந்து பைரவி ராகத்தை முதன்மை ராகமாக எடுத்து விஸ்தாரமான நேர்த்தியாக ஆலாபனை செய்து தீட்சிதரின் 'பாலகோபால என்ற கிருதியை கல்பனா ஸ்வரங்களுடன் பாடி அதற்க்கு வயலின் மற்றும் மிருதங்கத்தை தனி ஆவர்த்தனம் மிக சிறப்பாக அமைந்தது.

தொடர்ந்து மாஹூரி ராகத்தில் 'மாமாவை ரகுவீர என்ற தீக்ஷிதர் கிருதியை பாடி எல்லோர் மனத்தையும் சிக்கெனப் பிடித்தார் . அடுத்து ராகம் தானம் பல்லவியில் எடுத்த நாட்டை ராகம் மிகத் தொன்மையானது. நாட்டைராகத்தை நன்றாக ஆலாபனை செய்து ராகமாலையாக பல ராகங்களில் தொடுத்து பாடியது மிக சிறப்பாக இருந்தது. “சங்கீதே நாடகப்ரியே தேவி முகந் தேஹி ” என்ற அதன் பல்லவி மிகச்சிறப்பாக அமைந்தது. சுமித்ராவின் சுத்தமான ஆலாபனையில் குரலின் தன்மைக்கேற்ப நாம் வழங்கப்பெற்றதும் சிறப்பு. தானம் பகுதியும் நன்றாக அமைந்தது. கண்டதிரிபுட நடையில் அமைத்துப் பாடினார்.

தொடர்ந்து செஞ்சுருட்டி ராகத்தில் ஒரு கிருதியும் பின் புரந்தர தாஸரின் க்ருதியை தொடர்ந்து திருப்புகழ் பாடி கச்சேரியை இனிதாக மங்களம் முடித்தார். ஸ்மிதா அழுத்தமான வயலின் வாசிப்பில் கச்சேரிக்கு மேலும் வலுவூட்டினார். அவரின் வயலின் வாசிப்பு கச்சேரிக்கு நல்ல பக்கபலமாய் அமைந்தது. மிருதங்கம் கணபதிராமன் வாசிப்பு தனியாவர்த்தனத்தில் அலைகடலாய் ஆர்ப்பரித்து ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றார்.


இறுதியில் பிரியா ஸ்ரீனிவாசன் கலைஞர்களை பாராட்டி பேசி மிகச்சிறப்பான முறையில் நன்றியுரை கூறி முடித்தார்.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

அக்டோபர் 28 ல் உலக அமைதி தினம்

அக்டோபர் 28 ல் உலக அமைதி தினம்...

அக்டோபர் இறுதி வரை ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்

அக்டோபர் இறுதி வரை ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

நெருங்கியது வடகிழக்கு மழை

சென்னை, வடகிழக்கு பருவமழை துவங்க மூன்று நாட்களே உள்ள நிலையில், தென் மேற்கு பருவ காற்று திசை மாறி, கிழக்கில் இருந்து வீச துவங்கியுள்ளது. இதனால், பருவமழை கணித்தபடி ...

அக்டோபர் 23,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us