சிங்கப்பூரில் நடமாடும் மருத்துவ மனை நன்கொடை விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் நடமாடும் மருத்துவ மனை நன்கொடை விழா

செப்டம்பர் 18,2018  IST

Comments

சிங்கப்பூர் செட்டியார்கள் கோயில் குழுமம் அதன் நிர்வாகத்திலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம் மற்றும் லயன் சித்தி விநாயகர் ஆலயங்களை மிகச் சிறந்த வழிபடு ஸ்தலங்களாகப் பேணிப் பாது காத்து சிறந்து விளங்கவதோடு அதன் பக்தர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. பல இன மக்களிடை மருத்துவ சேவைப் பணியிலும் ஆலயங்கள் முன்னிலை வகிக்கின்றன.

டேங்க் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் செப்டம்பர் 16 ஆம் தேதி சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட “ மெது நடை ஓட்டம் “ நடைபெற்றது. சிறப்பு அம்சமாக சமுதாய நற்பணிகளின் ஒரு பகுதியாக “ சன்லவ் “ இல்லத்திற்கு நடமாடு்ம் மருத்துமனை நன்கொடை வழங்கு நிகழ்ச்சி மெது நடை ஓட்டத்திற்குப் பின் நடைபெற்றது.

சிங்கப்பூர் பிரதமர் துறை அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அமைச்சர் செட்டியார் குழும ஆலயங்களின் சமுதாய சேவைப் பணிகளை வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினார். சன்லவ் இல்ல நிர்வாகக் குழுத் தலைவர் வீ லின் இந்நன்கொடையை பெற்றுக் கொண்டார். இதன் மூலம் சமுதாயத்தின் அனைத்து இன மக்களும் பயன் பெறுவர். தொழிலாளர்கள் – குடியிருப்பாளர்கள் – முதியோர் – இயலாதோர் மருத்துவ உதவி பெறுவர். இவ்விழாவில் எழுவருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வண்டிகளும் அளிக்கப்பட்டது. “ மக்கள் சேவையே மகேசன் சேவை “ என்பதை நிரூபிக்கும் வண்ணம் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்டோர் மகிழ்ச்சிப் பெருக்கோடு சென்றனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ் நெஞ்சம் - டிசம்பர் இதழ்

தமிழ் நெஞ்சம் - டிசம்பர...

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை ...

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)