அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

செப்டம்பர் 19,2018  IST

Comments (1)

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்

அம்பாள் : அபிராமிஅமமன்

இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.

மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் பாரம்பரிய ஆலயச் சிறப்புகள் ஆகும். சில ஆலயங்களுக்கு மூர்த்திகளால் மகிமை. சில ஆலயங்கள் தலச்சிறப்பினைப் பெற்றவை. தீர்த்தத்திற்குரிய பெற்றவைகளும் உண்டு. இம்மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற ஆலயங்களும் உள்ளன. பொதுவாக நமது நாடு தவிர்த்து,வெளி உலகங்களில் ஆலயங்கள் மூர்த்திகளின் சிறப்பினைப் பெற்று விளங்குகின்றன. 

நமது பாரம்பரியத்தில் குலதெய்வ வழிபாடு மிக முக்கியமானது. இதன் காரணமாகவே ஒரே ஆலயத்தில் பல மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம் என்றதொரு கருத்து நிலவி வருகின்றது. வினாயகர் வழிபாடு,முருகன் வழிபாடு அம்மன் வழிபாடு போன்ற வழிபடு மூர்த்திகள் ஒரே ஆலயத்தில் இருப்பதற்கு காரணம் குலதெய்வ வழிபாடு என்பது பொதுவான கருத்து ஆகும். 

இவ்வாறு வழிபடும் பக்தர்களின் வசதியினை முன்னிறுத்தி, இலண்டனில் கிராய்டன் என்ற பகுதியில் உள்ள, அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் பல்வேறு மூர்த்திகள் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

கிராய்டனில் அமைந்தள்ள ஆலயத்தில் முக்கிய சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பது முத்துமாரி அம்மன் ஆகும். அம்பாளுக்கு சற்று முன்பாக அம்பாளின் வலப்பக்கத்தில் அருள்மிகு தெய்வம் சக்தி வினாயகரையும், இடப்பக்கத்தில் அருள்மிகு முருகனையும் நாம் கண்டு வணங்கிடலாம். இத்தலத்தில் மகாமரகதலிங்கேஸ்வரர் மகத்துவம் நிறைந்த மூர்த்தியாகக் காட்சியளிக்கின்றார். மரகதத்தினால் ஆன இலிங்கேஸ்வரின் உயரம் 13 அங்குலமாகும். இவ்வாறு ஒரு அடி உயரத்திற்கும் அதிகமான மரகலிங்கத்தை பொதுவாக நாம் எங்கும் தரிசிப்பது அரிது என்று இவ்வாலயத்தின் அறங்காவலர் சபையின் தலைவர் நாகேந்திர சீவரத்தினம் குறிப்பிட்டார். 

இத்திருத்தலத்தினை அபிவிருத்தி செய்யும் பொருட்டு,இந்த கோவிலின் அருகிலேயே மிக பிரமாண்டமான திருத்தலத்ததைக் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்து,கட்டுமானம் கட்டுவதற்குரிய அனுமதியும் பெற்றுள்ளார். 

இத்தலத்தில் எம்பெருமான் அமிர்தலிங்கேஸ்வரர் அபிராமி அம்பாளுடன் காட்சியளிக்கின்றார். அமிர்தலிங்கேஸ்வரருக்கு எதிரில் நந்தி தேவர் அமைந்துள்ளார். இங்கு பலிபீடமும் உள்ளது. மரகலிங்கத்திற்கு அடுத்து நாம் சிவகாமசுந்தரி சமேத வீற்றிருக்கும் நடராஜப் பெருமானைத் தரிசிக்கலாம். அருகில் சீதை இராமன் இலட்சமணன் பக்த ஆஞ்ச நேயரையும் இலட்சுமி, சரஸ்வதி, துர்கையம்மன், குருவாயுரப்பன் ஆகிய அருள்மிகு தெய்வங்களையும் கண்டு வணங்கிச் செல்லலாம். இத்திருத்தலத்தில் தனியாக நவகிரகம் சன்னதியும் உள்ளது. மேலும் ஞானபைரவர், நால்வர், அபிராமிபட்டர், இராமாலிங்கசுவாமிகள், அருணகிரிநாதர், திருமுருககிருபானந்தவாரியார் ஆகியோர்களுக்கு தனித்தனியாக மூர்த்திகள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 

இத்தலத்தில் அருள்மிகு எழுந்தருளிய அம்மன் தனி சன்னதியில் இருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றாள் இலண்டனில் வாழும் சைவத் தமிழ் மக்களின் ஆன்மீக வளர்சிக்கும்,கலை,பண்பாட்டிற்கும் நிலைத்தளமாக இவ்வாலயம் திகழ்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது.

ஆணும் பெண்ணும் சேர்ந்தே உலகம் என்னும் தத்துவத்தை எடுத்துக் காட்டும் அர்த்தநாரிஸ்வரரை இத்தலத்தில் எழுந்தருளச் செய்தது பெரிதும் பாராட்டுதற்குரிய செயல் என்றும் கூறலாம். 

 இங்கிலாந்தின் முத்துமாரியம்மன் தலம் பற்றிய செய்தியினை இத்துடன் முடிக்கின்றேன். இங்கிலாந்து வரும் மெய்யன்பர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். கையகப்பேசி-020 8767 9881.

- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் சரஸ்வதி பூஜை

சிங்கப்பூரில் சரஸ்வதி பூஜை...

ஆக்லாந்தில் நவராத்திரி

ஆக்லாந்தில் நவராத்திரி...

மொரிஷியசில் நவராத்திரி வைபவம்

மொரிஷியசில் நவராத்திரி வைபவம்...

இங்கிலாந்தில் நவராத்திரி திருவிழா

இங்கிலாந்தில் நவராத்திரி திருவிழா...

Advertisement
Advertisement

ரயில்வே கிராசிங்கில் சிக்கிய லாரி மீட்பு

நெல்லை: வள்ளியூரில் ரயில்வே கிராசிங்கில் லாரி சிக்கி கொண்டது. இதனையடுத்து கொல்லத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வள்ளியூர் ரயில் ...

அக்டோபர் 20,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
ponpuni - Chennai,India
20-செப்-201800:48:15 IST Report Abuse
ponpuni லண்டனில் முத்து மாரியம்மன் ஆலயம் பற்றிய எனது கட்டுரை தினமலர்.காமில் பிரசுரித்தது குறித்து பெரிதும் மகிழ்கிறேன். வாழ்க வளமுடன் ச. பொன்ராஜ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us