மொரிஷியசில் நவராத்திரி வைபவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மொரிஷியசில் நவராத்திரி வைபவம்

அக்டோபர் 19,2018  IST

Comments

மொரிஷியஸ், அருள்மிகு பராசக்தி காளி கோவிலில் நவராத்திரி வைபவத்தின் ஒரு பகுதியாக கடந்த தம்பதிகள் பங்கேற்ற ஸஹஸ்ரநாம அர்ச்சனை விமரிசையாக நடந்தது. 15 தம்பதிகள் பங்கேற்ற இந்த பூஜை, மாலை 7 மணிக்கு துவங்கி , 8.30 மணி வரை நடந்தது. அதன் பின், காளி அம்மன் வைஷ்ணவி தேவி அலங்காரத்தில் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மறுநாள் மாலை சுமங்கலி தீப பூஜை மற்றும் கன்யா பூஜைகள் நடந்தன. சுமங்கலி தீப பூஜைக்கு, கோவில் குருக்கள் வழி நடத்த, சுமார், 100 க்கும் மேற்பட்ட பெண்கள், தமிழ் சம்பிரதாய முறைப்படி, அனைவரும் சங்கல்பம் செய்து, சுலோகங்களை கூறி தீபத்தினை ஏற்றி வழி பாடு செய்தது, கண் கொள்ளா காட்சியாக இருந்தது என்றே கூறலாம்.

தீப பூஜையினை அடுத்து, கன்யா பூஜை நடந்தேறியது. இக் கன்யா பூஜைக்காக, 12 கன்னிகைகளுக்கு, அலங்காரம் செய்து, அம்மனின் முன்பு அமர்த்தப்பட்டு, கன்யா பூஜை செய்து வைத்து, நல்லாசிகளையும், பிரசாதங்களையும், கோவில் குருக்கள், வழங்கினார். பின்னர், அம்மனுக்கு, மஹாலக்ஷ்மி அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நாதஸ்வரம், மற்றும் தவில் வித்வான்களின் சிறப்பான வாத்யத்துடன் நிகழ்ச்சிகள் நடந்தேறின. ஹேமாவதி மற்றும் கல்யாணி ராகங்களை வித்துவான்கள் பாட, அந்த ராகங்களின் அருமை பெருமைகளை கோவில் குருக்கள் எடுத்துரைத்தார். நவராத்திரி பூஜையின் இறுதி நாளன்று, காலை மஹா சண்டி ஹோமமும், அன்று இரவு அம்மன் திரு வீதி ஊர்வலமும் நடை பெற்ற்றது.

- நமது செய்தியாளர் ஆர்.வி.பாஸ்கரன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)