அமெரிக்க உலக அமைதி தின விழாவில் மகரிஷி பரஞ்ஜோதியார் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமெரிக்க உலக அமைதி தின விழாவில் மகரிஷி பரஞ்ஜோதியார்

நவம்பர் 06,2018  IST

Comments

 “ தனி மனித உயர்ந்த சிந்தைனை – ஆற்றல் – அமைதி நல்லெண்ணம் குடும்பத்தை உயர்த்துகிறது .குடும்ப அமைதி சமுதாயத்தையும் சமுதாய அமைதி நாட்டின் அமைதிக்கும் நாடுகளின் அமைதி பிரபஞ்ச அமைதிக்கும் வழிவகுக்கின்றன. தனி மனிதனான ஊராட்சித் தலைவரின் உயர் எண்ணம் -ஆற்றல் ஊராட்சியையும் – பேரூராட்சி – நகராட்சி – மாநில ஆட்சி அனைத்திலும் அந்தந்தத் தலைவர்களின் ஆற்றலால் நல்லெண்ண அலைகளைப் பரப்பி பிரபஞ்ச அமைதி தோன்றுகிறது “ என வட அமெரிக்காவிலுள்ள ஒமேகாவில் வட அமெரிக்க உலக சமாதான ஆலயம் அக்டோபர் 28 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த கோலாகலமான உலக அமைதி தின விழாவில் திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் ஞானபீடாதிபதி மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் சிறப்புரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 ஆம் தேதி முற்பகல் 11 மணி 11 நிமிடங்களுக்கு உலக அமைதிக்காக சிதறிக்கிடக்கின்ற மனித மனங்களை ஒருநிலைப்படுத்தி ஒவ்வொருவரும் ஒரு நிமிட அமைதி வேள்வி அனுஷ்டிப்பதன் மூலம் உலகனைத்துமுள்ள பகுதிகளில் அவ்வந்நாட்டு நேரப்படி நாள் முழுவதும் நல்லெண்ண அலைகள் பரவி உலக அமைதி ஏற்படும் என்ற குறிக்கோளோடு உலக அமைதித் தூதுவர் மகரிஷி பரஞ்ஜோதியாரால் மலேசியாவில் சர்வ தேச அளவில் சில ஆண்டுகளுக்கு முன் தொடக்கி வைக்கப்பட்ட உலக அமைதி தினம் இன்று உலகம் முழுவதுமுள்ள உலக சமாதான ஆலயக் கிளைகளால் சிறப்புற நடத்தப்படுவது குறிப்பிடத் தகுந்ததாகும்.


ஒமேகா இந்து ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் பிரமாண்ட விழாவுக்கு மகரிஷி பரஞ்ஜோதியார் பூரணகும்ப மரியாதையோடு வரவேற்று – மழலையர் மலர் தூவ இருபுறமும் திருவிளக்கேற்றி நின்ற மெய்யுணர்வாளரிடையே வாழ்த்திய வண்ணம் விழா மேடையை அடைந்தார். ஒரு நிமிட அமைதியுடன் விழா தொடங்கியது. தேசிய கீதம் – குருகீதம் தொடர ஆலய மரபுப்படி அஷ்ட தீபம் ஏற்றப்பட்டது.


அமெரிக்கப் பல்கலைக் கழகப் பிரபல நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் சஞ்சய் பி.சிங் – பிரபல கல்வியாளர் பேராசிரியர் டாக்டர் பாணி தேஜ் அதிதம் மற்றும் டாக்டர் பிரதீப் தேஷ்பாண்டே ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உலக அமைதியின் அவசியம் பற்றியும் குருமகானின் அமைதிப் பேரியக்கத்திற்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர். விழாவில் உலக அமைதி பற்றி நடத்தப்பட்ட கட்டுரை – கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளித்துச் சிறப்பிக்கப்பட்டது.


சிவ தாண்டவ நடனம் – வெள்ளைப் பூக்கள் நடனம் மெய்சிலிர்க்க வைத்தன. தமிழக நாட்டுப் புறக் கலைகளான ஒயிலாட்டம் – மயிலாட்டம் – தப்பாட்டம் – பறை ஆகிய கலைநிகழ்ச்சிகள் கண்ணுக்கு விருந்தாய் அமைந்தன. ஒமேகா உலக சமாதான ஆலய நிர்வாகிகள் சசிரேகா பாலகிருஷ்ணன் – ஜெயராமன் அம்பிகா உள்ளிட்டோர் மிகச்சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 

முன்னதாக ஐரோப்பிய நாடுகளில் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டு திரும்பிய மகரிஷி ஒமேகாவில் மகா சக்தி யோகம் – ஆழ்நிலை குண்டலினி யோகம் – ஞான தீட்சை அருளல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டார். செப்டம்பர் 12 ஆம் தேதி தொடங்கிய ஐரோப்பா – அமெரிக்க ஆன்மிக யாத்திரையை மகரிஷி நவம்பர் முதல்  தேதி நிறைவு செய்து தாயகம் திரும்பினார்.

- தினமலர் வாசகி சசிரேகா பாலகிருஷ்ணன்
Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us