சிங்கப்பூர் ஸ்ரீ நாராயணா மிஷன் இல்லத்தாரிடை தீபாவளிக் கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் ஸ்ரீ நாராயணா மிஷன் இல்லத்தாரிடை தீபாவளிக் கொண்டாட்டம்

நவம்பர் 08,2018  IST

Comments

சிங்கப்பூர் டாக்டர் அப்துல் கலாம் விஷன் சொசைட்டி – ஈசூனிலுள்ள ஸ்ரீ நாராயணா மிஷன் மூத்தோர் – இயலாதோர் இல்லத்திலுள்ளவரிடை தீபாவளி விழாவைக் கொண்டாடியது. வரவேற்புரை ஆற்றிய தலைமை நிர்வாக அதிகாரி தேவேந்திரன் 224 பேருடைய இவ்வில்லம் தனது எழுபதாவது ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில் இவ்விழா நடைபெறுவது பொருத்தம் என்றார்.

சீன நடனம் – பள்ளிச் சிறுமியர் வாய்ப்பாட்டு – வயலின் இசை – மழலை மாறாச் சிறுவனின் குத்தாட்டம் என இல்லத்தாரைக் கலை நிகழ்ச்சிகள் மகிழ்வித்தன. சொசைட்டியின் தலைவர் கேசவபாணி மற்றும் வழக்கறிஞர் நிர்மலன் பிள்ளை ஆகியோர் தங்கள் பிறந்த நாளை இவர்களிடை “ கேக் “ வெட்டிக் கொண்டாடினர். இல்லத்தில் வாழும் முதியவரொருவர் சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அருமையாகத் திரைப்படப் பாடலைப் பாடி அசத்தினார்.

நாடாளு மன்ற உறுப்பினர் இர்ஷாத் அகமது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமரர் அப்துல் கலாமுக்கு உகந்த சேவையைச் செய்து வரும் சொசைட்டியை வெகுவாகப் பாராட்டினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய ஈஸ்வர்லால் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். செயலாளரும் திரைப்பட அதிபருமான அருமைச்சந்திரன் நிகழ்வினை நெறிப்படுத்தினார். அமைப்பின் சார்பாக இல்லத்திலுள்ளோருக்கு தீபாவளி விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைப்பினர் சீருடையில் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us