ஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யா உபன்யாசம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யா உபன்யாசம்

நவம்பர் 13,2018  IST

Comments

ஆக்லாந்தில் சென்ற ஞாயிறன்று மாலை பாண்டுரங்கன் பட்டாச்சார்யாவின் உபன்யாசம் ராகவாச்சாரி இல்லத்தில் நடைபெற்றது. ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் 649 வைத்து ஐப்பசி திருமூல நட்சத்திரத்தை ஒட்டி அவருடைய சிறப்புகளையும் பணிகளையும் பாண்டுரங்கன் எடுத்து கூறினார். ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம், ராமானுஜர் விட்டு சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமன் நாராயணனால் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பதை அழகாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் கல்யாணத்தையும் சிறப்புற நடத்தி வைத்தார். கல்யாணத்தில் முறையே, மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம், மாங்கல்யதாரணம், தேங்காய் உருட்டுதல் போன்ற எல்லா நிகழ்ச்சிகளும் இனிதாக நடைபெற்றது. பாண்டுரங்கனுக்கு ராம்ஸ் அமைப்பின் சார்பாக 'ப்ரவசன ரத்னா' என்ற விருதை ராகவன் வழங்கி கௌரவித்தார். வந்திருந்த அனைவருக்கும் மஹாப்ரசாதம் சிறப்பாக வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ் நெஞ்சம் - டிசம்பர் இதழ்

தமிழ் நெஞ்சம் - டிசம்பர...

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை ...

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)