சிங்கப்பூரில் கந்த சஷ்டி கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கந்த சஷ்டி கோலாகலம்

நவம்பர் 14,2018  IST

Comments

  

சிங்கப்பூர் ஆலயங்களில் கந்த சஷ்டி நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கி வழக்கமான உற்சாகத்துடன் பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடைபெற்றது. சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் எட்டாம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக கந்த சஷ்டிப் பெரு விழா நடைபெற்றது. 13 ஆம் தேதி மாறுபடு சூரனை வதைத்த காட்சி தத்ரூபமாக அமைந்தது. நாள்தோறும் காலையில் விசேஷ மூல மந்திர ஹோமம் – அபிஷேகம் – இரவில் கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் முருகப் பெருமான் ஒவ்வொரு அலங்காரத்தில் ஜொலித்து அருள்பாலித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 13 ஆம் தேதி சூர சம்ஹார நிகழ்வுக்குப் பெருந்திரளான பக்தப் பெருமக்கள் வந்திருந்தனர். “ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ...” என்ற முழக்கம் மெய்சிலிர்க்க வைத்தது. சூரனை வதைத்த வெற்றி வேல் முருகன் திருக்கல்யாணம் 14 ஆம் தேதி தெய்விக உணர்வைத் தோற்றவித்தது.


ஐம்புலன் சேனைகளைக் கொண்ட ஜீவாத்மா எதிர்மறை எனும் அறுவகை அசுர சக்திகளால் அழியாது பாதுகாக்க பரமாத்மா சிவன் சதாசிவனாக சுழிமுனையில் அமர்ந்து தேவ சேனாதிபதியாகச் செய்யும் தற்காப்புப் போர்தான் இக் கந்த சஷ்டி . எனவே எண்ணம் - சொல் – செயல் மூன்றையும் சேனாதிபதியிடம் ஒப்புவித்தால் அதில் சீராய் இருந்து இகபர சுகம் பெறலாம் என்பது தத்தவார்த்த விளக்கம்.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ் நெஞ்சம் - டிசம்பர் இதழ்

தமிழ் நெஞ்சம் - டிசம்பர...

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை ...

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us