ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் சார்பில் தீபாவளி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் சார்பில் தீபாவளி

நவம்பர் 18,2018  IST

Comments

ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் 17 11 2018 சனிக்கிழமையன்று தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். சிறப்பு விருந்தினராக சென்னையிலிருந்து தமிழ் சினிமா காமெடி நடிகரான சின்னி ஜெயந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார். குத்துவிளக்கேற்றி விழா இறைவணக்கத்துடன் தொடங்கபட்டது. Michael Wood, M.P., பிரியங்கா ராதாகிருஷ்ணன் M.P. மற்றும் பல பிரபலமானவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

முதலில் ஆக்லாந்து தமிழ் அஸோஸியேஷன் தலைவர் வை.ரவீந்திரன் எல்லோரையும் வரவேற்று பேசினார். மைக்கேல் வுட்டின் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டி அவருக்கு ஆக்லாந்து தமிழ் அஸோஸியேஷன் சார்பாக 'தமிழ் செல்வன்' என்ற பட்டத்தை ரவீந்திரன் கொடுத்து கௌரவித்தார். பின்னர் பேட்மிண்டன் விளையாட்டில் பங்குபெற்ற ஜூனியர் மற்றும் சீனியர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் சிறுவர்களின் நடன மற்றும் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பிறகு சிறப்பு விருந்தினரான சின்னி ஜெயந்தின் மிமிக்ரி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. அவர் ரசிகர்களுக்கு சினிமா பாடல்களும் பாடி மகிழ்வித்தார். எல்லோரும் ரசித்து அரங்கம் நிறைந்த கைத்தட்டல் பெற்றார். தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகரான யுகேந்திரன் ரசிகர்களின் விருப்பங்களை கேட்டு பாடல்களைப் பாடி மகிழ்வித்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலைவர் ரவீந்திரன் நன்றியுரை ஆற்றினார். பிறகு தீபாவளி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ் நெஞ்சம் - டிசம்பர் இதழ்

தமிழ் நெஞ்சம் - டிசம்பர...

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை ...

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

Advertisement
Advertisement

பிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனு தள்ளுபடி

மதுரை : 2019 ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதில் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் ஏதும் ...

டிசம்பர் 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us