லேகோஸ் கந்த சஷ்டி வைபவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லேகோஸ் கந்த சஷ்டி வைபவம்

நவம்பர் 19,2018  IST

Comments

 லேகோஸ், நைஜீரியா: தீபாவளி கொண்டாடி முடித்த உடனே நவம்பர் 7ம் தேதி லேகோஸ் வாழ் தமிழ் மக்கள் கந்த சஷ்டிக்கு ஆயத்தம் ஆனார்கள். லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் மாலை 6மணி அளவில் காப்பு கட்டப்பட்டது.

நவம்பர் 8ம் தேதி காலை 10மணிக்கு கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கியது.

சஷ்டி 6நாளும் முருகனுக்கு காலையும் மாலையும் சிறப்பு பூஜைகள், அலங்காரம் மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டது. பக்தர்கள் 6நாளும் முருகன் சந்நிதானம் முன் 6முறை கந்த சஷ்டி கவசமும் மற்றும் 1முறை ஸ்கந்த குரு கவச்சமும் ஒதினார்கள். மாலையில் சிறப்பு பாடல்களும் பாடப்பட்டது.

காலையில் விபூதி, சந்தனம், தங்கம் மற்றும் வெள்ளி காப்பில் ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தார். மாலை பால கந்தன், பழனி ஆண்டி, ராஜ அலங்காரம், ஞான ஸ்கந்தர், அன்னை பார்வதியிடம் வேல் வாங்குதல், விஷ்வரூப காட்சி என்று ப்ரமாதமாக ஜொலிதார். ஓவ்வொரு நாளும் மிகவும் நேர்த்தியாக காலை மாலை இருமுறை முருகனுக்கு அலங்காரம் செய்து பக்தர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்தினார் சிவகுமார் சிவாச்சாரியார் என்றால் அது மிகை ஆகாது.

சஷ்டி முடிந்து புதன்கிழமை கணபதி ஹோமம் மற்றும் வியாழன் அன்று ஸ்ரீவித்யா ஞான அபிவிருத்தி ஹோமமும் வளர்க்கப்பட்டது. வெள்ளி அன்று 5சுமங்கலிகளுக்கு பூஜை செய்யும் சுஹாசினி பூஜை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நவம்பர் 17ம் தேதி சனிக்கிழமை மாலை 6மணி அளவில் பார்வதியிடம் வேல் வாங்கி சூரபத்மனை வதம் செய்த காட்சி நடந்தேறியது, குடும்பத்தோடு காண கூட்டம் அலைமோதியது.

நவம்பர் 18ம் தேதி காலை 9மணி முதல் சீர் தட்டுகள் வெற்றிலைபாக்கு, தேங்காய், பழங்கள், இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள், முந்திரி-பாதாம் போன்றவைகள், உலர்ந்த பழவகைகள் பக்தர்கள் அடுக்கி வைக்க ஊஞ்சல், முகூர்த்தம் என்று முருகன் திருக்கல்யாணம் இனிதே நிறைவுற்றது. மயில் வாகன வள்ளி-தெய்வானை சமேதராக ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி அருள் பாலித்தார்.

வாழை இலை போட்டு மதிய உணவு பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது இவ்வைபவத்தின் சிறப்பு அம்சமாகும்.

இவ்வாறு முருகன் சூரபத்மனை வதம் செய்த நன்னாளில் ஒவ்வொரு மனிதன் உள்ளிருக்கும் அச்சம், பொறாமை, பேராசை, கோவம், கர்வம், காமம், வஞ்சம், அஞ்ஞானம் போன்ற அசுரர்களை வதம் செய்ய குமரன் அருள் வேண்டி ப்ரார்தனை செய்து கொண்டார்கள்.

- நமது செய்தியாளர்ஸ்ரீ வித்யா அனந்தன்


Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ் நெஞ்சம் - டிசம்பர் இதழ்

தமிழ் நெஞ்சம் - டிசம்பர...

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை ...

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

Advertisement
Advertisement

டிச.,14, 15ல் மோடி கலந்துரையாடல்

புதுடில்லி : தமிழகம், கேரளா உள்ளிட்ட 10 லோக்சபா தொகுதிகளை சேர்ந்த, பா.ஜ., பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். டிச.,14 மற்றும் 15ம் தேதிகளில் ...

டிசம்பர் 12,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us